பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/626

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேதாந்த தேசிகர்

622

வைத்தியநாத தேசிகர்


முன்சிபாக இருந்தவர். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை மாணவர். கத்தோலிக்கக் கிறித்தவர். திருவாவடுதுறை ஆதின மடாதிபதிகளிடத்தும் பேரன்பு காட்டியவர். திரிசிரபுரத்தில் பிறந்தவர். இவர் பெண் புத்தி மாலை, நீதி நூல், சர்வ சமரச கீர்த்தனை, பிரதாப முதலியார் சரித்திரம் முதலான நூல்களைச் செய்தவர். பல தனிப்பாடல்களையும் பாடியவர். கி.பி. 19 ஆம் நூற்றாண்டு.

வேதாந்த தேசிகர் = காஞ்சிபுரத்தில் பிறந்த வைஷ்ணவ சமயத்தினர். இவர் திருவேங்கடமுடையார் என்ற இயற்பெயரை முன்னர் பெற்றிருந்தவர். வடகலை மரபினர்களுக்குரிய மதாசாரியர். பல நூல்களைத் தென்மொழியிலும் வடமொழியிலும் இயற்றியவர். அத்திகிரி மான்மியம் இவரால் இயற்றப்பட்டது. நவரத்தின மாலை, பிரபந்த சாரம், பன்னிரு நாமம் முதலானவை இவர் இயற்றியவை. கி.பி.14ஆம் நூற்றாண்டு.

வேலாயுத முதலியார் = இவரைத் தொழுவூர் வேலாயுத முதலியார் என்றும் கூறுவர். இலக்கண இலக்கியம் நன்கு பயின்றவர். இராமலிங்க அடிகளாரை அடுத்து அவருக்குத் தொண்டு செய்தவர். சென்னை இராஜதானிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர். திருவருட்பாவைத் தொகுத்தவர் இவர் என்பர். திருவெண்காட்டடிகள் வரலாறு, வேளாண் மரபியல் முதலியன இவர் எழுதிய நூற்கள். கி.பி.19 ஆம் நூற்றாண்டு.

வேலைய தேசிகர் = இவர் காஞ்சிபுரத்தில் பிறந்தவர். வீர சைவ மரபினர். துறைமங்கலம் சிவப்பிரகாசரின் சகோதரர். வெள்ளியம்பலத் தம்பிரானிடம் கல்வி பயின்றவர். காளத்திப் புராணத்தின் இறுதிப்பகுதியின் ஆசிரியர். இவர் நல்லூர்ப் புராணம், மயிலை இரட்டைமணி மாலை, மயிலத்துலா முதலான நூற்களைப் பாடியுள்ளார். கி. பி. 12 ஆம் நூற்றாண்டு.

வை

வைத்தியநாத தேசிகர் = இவரை வைத்தியநாத நாவலர் என்றும் கூறு