பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/630

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஸ்ரீலஸ்ரீ மகாலிங்கத்

626

ஸ்ரீலஸ்ரீ மதுரைச் சோம


களில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை பெருங் கோவில்களில் சிவசிவ என்னும் மந்திரத்தை மின் ஒளி மூலமாக யாவரும் கண்டு கூறிப் பயனடையுமாறு செய்திருப்பதும், அத்தலத்துத் தேவாரத் திருவாசகப் பதிகங்களைச் சலவைக் கற்களில் பொறித்துச் சுவரில் பதியவைத்திருப்பதும் ஆகும். "சமய வளர்ச்சிக்கு இன்னும் என்ன செய்யலாம்?" என்பதைத் தினமும் சிந்தித்துச் செய்து வருபவர். கி.பி. 20ஆம் நூற்றாண்டு.

ஸ்ரீலஸ்ரீ மகாலிங்கத் தம்பிரான் சுவாமிகள் = இவர்கள் திருப்பனந்தாள் திருமடத்து இளவரசுப் பட்டம் பெற்றுத் திகழ்பவர். வித்துவான் பட்டம் பெற்றவர். நல்ல எழுத்தாளர். பேச்சாளர். பல தலங்களைப் பற்றிய வரலாறுகளைத் தக்க கல்வெட்டுச் சான்றுகளைக் கொண்டு எழுதி வருபவர். இந்த முறையில் எழுதப்பட்ட காஞ்சித் தலத்தைப் பற்றியும், திருவாலவாய்த் தலத்தைப் பற்றியும் எழுதியுள்ள நூற்களில் காணலாம். இவரது திருமடத்தின் சார்பில் வெளிவரும் நூற்களுக்கு எழுதிவரும் முகவுரைகள் இவரது புலமையை வெளியாக்குவன. கி. பி. 20 ஆம் நூற்றாண்டு.

ஸ்ரீலஸ்ரீ பாலய்ய சுவாமிகள் = இவர்கள் திருமயிலம் திருமடத்துத் தலைவர். இவர் தமிழ்மொழி ஆக்கம் பெறவேண்டுமென்ற கருத்துடன் வித்துவான் பட்டம் பெறத்தக்க கல்லூரியினை நடத்தி வருபவர். சிவப்பிரகாச சுவாமிகளின் பிரபந்தங்களை ஒன்று சேர்த்து வெளியிட்டவர். பிரபுலிங்க லீலையில் ஒரு பகுதிக்கு உரை எழுதுமாறு செய்து வெளிவரச் செய்தவர். கி. பி. 20 ஆம் நூற்றாண்டு.

ஸ்ரீலஸ்ரீ மதுரைச் சோமசுந்தர தேசிகப் பரமாசாரிய சுவாமிசுள் = இவர் மதுரைத் திருஞான சம்பந்தர் திருமடத்தின் ஆதீனகர்த்தராக இருந்து கொண்டு சைவத்திற்கும் தமிழுக்கும் பெருந்தொண்டு செய்து வருபவர். இவர் பற்பல சமய மாநாடுகளுக்கும் சங்கங்களுக்கும்