பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/631

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஸ்ரீலஸ்ரீ குன்றக்குடி

627

ஸ்ரீலஸ்ரீ ரமணரிஷி


தலைமைபூண்டு அவற்றின் வாயிலாகத் தலைமையுரைகளை ஆற்றிச் சமயத் தொண்டு புரிந்து வருபவர். அவைகள் அச்சிடப்பட்டும் வழங்கப்பட்டு வருகின்றன. இவர் பலருக்குச் சிவதீட்சை செய்து, அவர்களைச் சிவபூசை செய்யுமாறு செய்து வருபவர். இறந்தவர்களோடு பேச முடியும் என்பதைக் குறித்து எண்ணமுடையவர். அது சம்பந்தமான கருத்துக்களைப் பேசியும் நடத்திக்காட்டியும் வருபவர். கி. பி. 20 ஆம் நூற்றாண்டு.

ஸ்ரீலஸ்ரீ குன்றக்குடி அடிகளார் = இவர் வித்துவான் பட்டம் பெற்ற சைவத் துறவியார். நல்ல பேச்சாளர். சீர்திருத்தக் கருத்துக் கொண்டவர். தேவார திருவாசக, திருவாய்மொழிகளின் மூலம் தேவாலயங்களில் அர்ச்சனை நடைபெற வேண்டுமென்ற கருத்துக் கொண்டவர். அக் கருத்தை எங்கும் பரப்பி வருபவர். இராமநாதபுரத்தைச் சார்ந்த குன்றக்குடித் திருமடத்துக்குத் தலைவர். மலேயா, சிங்கப்பூர் முதலான இடங்கட்குச் சென்று இந்துமத சார்பான சொற்பொழிவுகளை நடத்தியவர். பிற மதத்தர்கள் செய்வது போல பிற மதத்தினரையும் சேரியில் உள்ளவர்களையும் சீர்திருத்தி இந்து மதத்தில் சேர்த்து மதத்தை வளம்படுத்த வேண்டுமென்ற எண்ணங் கொண்டு உழைப்பவர். இவர் அவ்வப்போது பேசிய பேச்சுக்கள் அச்சு வடிவில் வந்துள்ளன. அவற்றுள் ஒன்று தமிழ்இசைச் சங்க ஆண்டு விழாவில் தலைமை வகித்தபோது பேசிய தலைமைப் பேச்சு அடங்கிய நூலாகும். கி.பி.20 ஆம் நூற்றாண்டு.

ஸ்ரீலஸ்ரீ ரமணரிஷி = இவர் இளமையிலேயே வைராக்கியம் கொண்டு துறவினை மேற்கொண்டவர். திருவண்ணாமலையில் வந்து தங்கி ஓர் ஆஸ்ரமத்தை உண்டாக்கிப் பல அன்பர்களை நன்னெறிபடுத்தியவர். துறவியே ஆனாலும் தாயார் மீது பற்றுக்கொண்டு தம் ஆஸ்ரமத்திலேயே அவர்கட்குச் சமாதி அமைத்துப் பூசித்தவர். ஒரு சமயம் இவரது திருமடத்தில் பல பரதேசிகள் வந்து கூடி