பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/634

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இராஜகோபாலாசாரியார்

630

இலக்குமணப் பிள்ளை


ஆயின. அவ்வக் கோயில்களின் வரலாறுகள் வெளிவருவன ஆயின. ஆராய்ச்சியில் வல்லவர். பல ஆராய்ச்சி நூற்களையும் கட்டுரைகளையும் எழுதியவர். கொங்கு நாட்டைப்பற்றி அவர் எழுதியுள்ள நூல் படித்து அறிதற்குரியது. கி.பி.20 ஆம் நூற்றாண்டு.

இராஜகோபாலாசாரியார் இவரை ராஜாஜி என்றும் அழைப்பர். சிறந்த அரசியல் அறிஞர். கவர்னர் ஜனரல் பதவியினை முதல்முதல் ஏற்ற அறிஞர் இவரே. சென்னையில் முதல் அமைச்சராகவும் இருந்து தொண்டாற்றியவர். இவரது பேச்சில் உவமைகள் மலிந்து காணப்படும். அவைகள் நூலாகவும் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளன. இவர் பலப்பல நூல்கள் எழுதியுள்ளார். அனைத்தும் வெளியாகி உள்ளன. கல்கியில் இவர் எழுதிய கட்டுரைகள் அனந்தம். அண்மையில் வெளிவந்த வியாசர் விருந்து எல்லாருடைய உள்ளத்தையும் கவர்ந்துள்ளது. கி. பி. 20 ஆம் நூற்றாண்டு.

இராமநாதஞ் செட்டியார் இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் இருப்பவர். பண்டித பரீட்சையிலும், வித்துவான் தேர்தலிலும் தேர்ந்தவர். மத்திய அரசாங்கத்தாரால் நிறுவப்பட்ட சாகித்திய அகடெமியின் சார்பில், இதுவரையிலுள்ள தமிழ் இலக்கியங்களையும், ஆசிரியர்களையும் அறிவிக்கக்கூடிய நூலினைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர். கல்லூரி மாணவர்கட்குரிய உரைநடை நூல்களை எழுதியவர். கி.பி. 20 ஆம் நூற்றாண்டு.

இலக்குமணப் பிள்ளை இவர் திருவனந்தபுரத்தைச் சார்ந்தவர். திருவாங்கூரில் மொழிபெயர்ப்பாளராக அலுவல் பார்த்து வந்தவர். இவர் தமிழ்க் கீர்த்தனை பாடவேண்டும் என்ற நோக்கத்துடன் தியாகைய்யர் தெலுங்கு கீர்த்தனைகளைப் போலத் தமிழில் கீர்த்தனைகளைப் பாடியவர். சங்கீதம் பயின்றவர். கி.பி.19 ஆம் நூற்றாண்டு.