பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/637

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதிரேசஞ் செட்டியார்

633

கிருஷ்ணமூர்த்தி


கதிரேசஞ் செட்டியார் இவர் மகாமகோபாத்தியாய பட்டமும் பண்டித பட்டமும் பெற்றவர். வடமொழி தென்மொழி அறிந்தவர். நகைச்சுவை ததும்பப் பேச வல்லவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர். திருவாசகத்தில் நீத்தல் விண்ணப்பம், திருச்சதகம் ஆகிய இவற்றிற்கு உரை எழுதியவர். சுக்ர நீதியைத் தமிழ் மொழியில் பெயர்த்து வெளியிட்டவர். கி.பி. 20 ஆம் நூற்றாண்டு.

கத்தைய்யா பிள்ளை இவர் சிறந்த ஆராய்ச்சியாளர். சைவ சமயத்தவர். ஓயாது படித்துக் கொண்டிருப்பவர். சங்க நூற்களுள் பலவற்றை உரைநடையில் எழுதியவர். இவர் எழுதியுள்ள நூற்கள் பல. அவற்றுள் மறைந்த நகரங்கள், திருவள்ளுவர் அறிவுரைக்கோவை, அறிவுரை மாலை, ஆரிய வேதங்கள், ஆதிமனிதன், ஆதி உயிர்கள் திருமணம் முதலானவற்றைக் குறிப்பிடலாம். கி.பி. 20 ஆம் நூற்றாண்டு.

கா

கார்மேகக்கோனார் இவர் அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்து இது போது ஓய்வு பெற்று விளங்கும் தமிழ் அறிஞர். தூய தமிழில் உயர்ந்த நடையில் பேசவும் எழுதவும் ஆற்றல் மிக்கவர். இவர்பால் அமைந்த இத் தன்மைகளை இவர் எழுதிய நல்லிசைப் புலவர் என்னும் நூலில் கானலாம். கி. பி. 20 ஆம் நூற்றாண்டு.

கி

கிருஷ்ணமூர்த்தி இவரைக் கல்கி என்றதும் எவரும் அறிந்து கொள்வர். இவர் தமிழ் மொழிக்குச் செய்துள்ள தொண்டு அனந்தம். இவரது உரைநடை எளிய நடையில் அமைந்து அரிய பொருளினைக் கொண்டு திகழும். இவர் சிறுகதை எழுதுவதில் தலைசிறந்த ஆசிரியர். இவர் எழுதிய நூல்கள் பல வெளிவந்துள்ளன. தமிழ் இசை வளரவும், பாரதியார் பாடல் பரவவும், பெரிதும் பாடுபட்டவர். ஸ்மார்த்த பிராமண