பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/639

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுப்பிரமணிய முதலியார்

639

சேதுப்பிள்ளை


பெற்றவர். பெரியபுராணத்தில் மிகுதியும் ஈடுபாடு உடையவர். அந் நூலைப்பற்றி விரிந்த முறையில் ஓர் ஆராய்ச்சி நூல் எழுதியுள்ளார். அதுவே சேக்கிழார் என்பது. பெரியபுராணத்திற்கு ஈடும் எடுப்பும் இல்லா உரையையும் எழுதியுள்ளார். கி. பி. 20 ஆம் நூற்றாண்டு.

சுப்பிரமணிய முதலியார்' = இவர் வெள்ளக்கால் என்னும் ஊரினர். மருத்துவர் தொழில் மேற்கொண்டவர். ஆங்கிலமும் அருந்தமிழும் அறிந்தவர். கம்பராமாயணத்தில் மிகப்பற்றுக்கொண்டவர். இவர் இராமாயண உள்ளுறை பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் என்னும் நூலை இயற்றியவர். இதுவே அன்றி, அகலிகை வெண்பா, கோம்பி விருத்தம் போன்ற நூல்களையும் செய்துள்ளார். கி.பி. 20ஆம் நூற்றாண்டு.

செ

செங்கல்வராய பிள்ளை = இவர் சைவ மரபினர். எம்.ஏ. பட்டம் பெற்றவர். அமைதியாக இருந்து நூல்ஆராய்ச்சி செய்பவர். பல கட்டுரைகளை எழுதியவர். இவரது நுண்ணிய அறிவுத்திறனைத் திருப்பனந்தாள் திருமடத்தார் வெளியிட்டுள்ள கந்தபுராண நூலின் முகப்பில் இவர் கந்தபுராணத்தைப் பற்றி எழுதியுள்ள குறிப்புக்களைக் கொண்டு உணரலாம். காலம் கி.பி.20 ஆம் நூற்றாண்டு.

சே

சேதுப்பிள்ளை ரா. பி. = இவர் டாக்டர் பட்டம் பெற்றவர். பி.ஏ.பி.எல். பட்டமும் உடையவர். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியராக இருப்பவர். சைவ சமயத்தவர். இவரது பேசுந்திறன் அறிந்த தமிழ் நாட்டு நல்லறிஞர் இவரைச் சொல்லின் செல்வர் என்று சொல்லி மகிழ்வர். இவரது பேச்சிலும் எழுத்திலும் செந்தமிழ் நடை சிறந்து விளங்கும். இவரது எழுத்தாற்றலைப் பாராட்டி டில்லி அரசாங்கம் இவரது கட்டுரைத் தொகுதிகள் அடங்கிய தமிழ் இன்பம் என்னும் நூலுக்கு ரூ. 5000 பரிசு அளித்திருக்கின்றது. இவர் பல அரிய நூல்களை