பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உட்கோள்

61

உதம்


உட்கோள் = கருத்து, கோட்பாடு, உட்கொள்ளுதல்
உட்டெளிவு = வடித்தசாறு, உள்ளத்தெளிவு
உஷ்ணோதகம் = வெந்நீர்
உணக்கம் = வாட்டம்
உணக்குதல் = வாட்டுதல், உலர்த்துதல், கெடுத்தல்
உணங்கல் = உலர்தல், வற்றல், காய்தல், உலர்ந்த மலர், வாடல், உலர்ந்த தான்யம், காய்ந்த தசை, உணவு
உணர்ச்சி = அறிவு, புத்தி, ஸ்மரணை, மணம்
உணர்தல் = தெளிதல், தூக்கத்தில் இருந்து எழுதல், தொட்டு அறிதல், ஊடல் தீர்தல்
உணர்வு = ஆன்மா, ஒழிவு, உணர்ச்சி
உணா = உணவு
உணவின் பிண்டம் = உடம்பு
உணி = நீர் உண்ணும் குளம்
உண்கண் = மைதீட்டிய கண்
உண்கலம் = உண்ணும்பாத்திரம்
உண்டாடல் = விளையாட்டு
உண்டாட்டு = கள் குடித்து மகிழ்ந்து ஆடல், மகளிர் விளையாட்டு
உண்டி = உணவு, காணிக்கைக் கலம், மாற்றுச் சீட்டு
உண்டிகை = உண்டி, கூட்டம்
உண்டியல் = தருமத்திற்குக் கொடுக்கும் பணம்
உண்டை = திரள், படை வகுப்பு, உருண்டை, சூது கருவி, கவனம், கூட்டம்
உண்ணம் = மேன்மை
உண்ணாக்கு = மேல் நாக்கு
உண்ணாட்டம் = ஆராய்ச்சி
உண்ணோக்கம் = சிந்தித்தல்
உதகம் = நீர், பூமி
உதகரணம் = உழைத்து அமுக்குதல்
உதகரித்தல் = எடுத்துக் காட்டல், திருட்டாந்தம் கூறல்
உதணம் = மொட்டம்பு
உதக்கு = வடக்கு
உததி = கடல், மேகம்
உதந்தம் = சரித்திரம்
உதப்பி = ஈரல், எச்சில், சீரணியாத இரை
உதப்புதல் = கடிந்து பேசுதல், இகழ்ந்து நீக்குதல்
உதம் = ஓமம்