பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/644

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாராயணசாமிப் பிள்ளை

644

பரந்தாமனார்




நா

நாராயணசாமிப் பிள்ளை = இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக (வைஸ் சான்ஸ்லர்) இருந்து அரிய தொண்டினைச் செய்து வருபவர். தமிழ்இசைச் சங்கத் தலைவராக இருந்து வருபவர். இவர் இந்து ரிலிஜியஸ் எண்டோமண் போர்ட் தலைவராக இருந்த போது கோவில்களின் ஆட்சி முறைகள் பல ஒழுங்கு செய்யப்பட்டன. தமிழ் நூல்களையும் சமய நூல்களையும் படிப்பதில் ஆர்வம் மிக்கவர். இவரது சமயம் வைஷ்ணவம். என்றாலும், சைவப்பற்று மிகுதியும் உடையவர். தமிழிலும், ஆங்கிலத்தில் நன்கு பேசவல்லவர். பல மாநாடுகட்கும் ஆண்டுவிழாக் கூட்டங்கட்கும், தலைமை பூண்டு தமிழ் அறிஞர்கள் எழுதிய நூற்களுக்குச் சிறந்த முகவுரைகளைத் தமிழில் எழுதி அவர்களை ஊக்கி வருபவர். தமிழில் பல அரிய சொற்பொழிவுகளைச் செய்தவ்ர். காலம். கி. பி. 20 ஆம் நூற்றாண்டு.

நீலாம்பிகை அம்மையார் = இவர் மறைமலையடிகளாரின் திருமகளார். வடமொழிச் சொற்களுக்கு நேரான தமிழ் மொழிகளை அகராதி முறையில் எழுதி உதவிய பெருமாட்டியாவார். கி. பி. 20 நூற்றாண்டு.

பட்டுச்சாமி ஓதுவார் = இவர் வித்துவான் பட்டம் பெற்றவர். பள்ளிக்கூட மாணவர்கட்கு நூல் எழுதுபவர். இவர் திருப்னந்தாள் திருமடத்தின் கட்டளை பெற்று, கந்தபுராணம், பெரியபுராணம், திருவிளையாடற்புராணம் ஆகிய புராணங்களை உரைநடைப் படுத்தி எழுதியவர். சைவத் திருமுறைகளையும் ௸ திருமடத்தின் உத்தரவுப்படி பதிப்பித்தவர். கந்தர் கலிவெண்பாவிற்கு உரை எழுதியவர். கி.பி. 20ஆம் நூற்றாண்டு.

பரந்தாமனார் = இவர் மதுரைத் தியாகராயர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக இருந்து வருபவர்.