பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/645

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாலசுப்பிரமணிய ஐயர்

645

பாலசுப்பிரமணிய


எம்..ஏ. பட்டம் பெற்றவர். பேசுந்திறனும் எழுதும் திறனும் வாய்ந்தவர். சீர்திருத்தக் கருத்து உடையவர். இவர் எழுதிய நூற்களுள் நல்ல தமிழ் வேண்டுமா? என்பது படித்து இன்புறுதற்குரியது. கி. பி. 20 ஆம் நூற்றாண்டு.

பா

பாலசுப்பிரமணிய ஐயர் = இவர் சைவசமயத்தவர். பி.ஏ. பி.எல். பட்டம் பெற்றவர். சட்டசபை அங்கத்தினர். சமயப் பற்றில் தலை சிறந்தவர். தர்மரட்சாமணி என்னும் பட்டத்தினைச் சங்கராசாரிய சுவாமிகளால் கொடுக்கப் பெற்றவர். வடமொழியிலும் சைவத்திருமுறைகளிலும் நல்ல பயிற்சி பெற்றவர். ஆங்கிலத்திலும், தமிழிலும் நன்கு பேசவல்லவர். பேசுந் தொண்டின் வாயிலாகச் சமயத்திற்கும் தமிழுக்கும் ஆக்கம் தேடித்தருபவர். சிறந்த அறிஞர்கள் எழுதியுள்ள நூற்களுக்குத் தமிழில் முகவுரை எழுதி ஊக்கி வருபவர். காலம் கி.பி. 20 ஆம் நூற்றாண்டு.

பாலசுப்பிரமணிய முதலியார் = இவர் ஒரு வழக்கறிஞர் பி.ஏ. பி.எல். பட்டம் பெற்றவர். சைவசமய நூல்களிலும், சித்தாந்த சாத்திரங்களிலும், தமிழ் இலக்கியங்களிலும நல்ல பயிற்சியுடையவர். இவரது அரிய முயற்சியினால் சைவ சித்தாந்த சமாஜ வெளியீடாகப் பன்னிரு திருமுறைகளும் வெளிவந்தன. அவற்றின் வெளியீடே ஒரு தனிமதிப்புடையது. சங்க நூல் தொகுப்பும். தொல்காப்பியப் பதிப்பும் இவரது முயற்சியினால் வெளிவந்தனவே. ஆங்கிலத்திலும் தமிழிலும் சைவ சமயக் கருத்துக்களை எழுதியும் பேசியும் வருபவர். மூவர் தேவார அடங்கன் முறையினை இவர் பதிப்பித்து வெளியிட்டுள்ளதன் மூலம் இவருக்கு அத்தேவாரத்தில் உள்ள பரந்த அறிவைப் புலப்படுத்தியுள்ளார். நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தையும் இவர் பதிப்பித்துள்ளார். அது போது தம்மை மயிலை மாதவதாஸன் என்று குறிப்பிட்டுக் கொண்டனர். இவர் உள்ளதை