பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/649

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முத்தைய்ய செட்டியார்

649

வடிவேல் செட்டியார்


புலமை மிக்கவர். சொல்லாராய்ச்சி செய்வதில் பெருவிருப்பம் உடையவர். நல்ல தமிழ்ப் புலமை மிக்கவர். இது போது தருமை ஆதினத்தில் தமிழ்ப் பேராசிரியராக இருந்து வருபவர். இவரது அறிவு நுட்பத்தை இவர் எழுதியுள்ள இரண்டாம் திருமுறைக் குறிப்புரையில் காணலாம். நல்ல பேச்சாளர். சித்தாந்த கட்டுரைகள் பலவற்றை எழுதிவருபவர். கி.பி.20 ஆம் நூற்றாண்டு.

முத்தைய்ய செட்டியார் = இவர் ராஜா அண்ணாமலை செட்டியாரின் திருமகனார். இவருக்கும் ராஜா என்ற பட்டமும் சர் என்ற பட்டமும் உண்டு. எம்.ஏ. பட்டம் பெற்றவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் நன்கு பேச வல்லவர். தமிழ்மொழி வளர்ச்சிக்கும், தமிழ்இசை வளர்ச்சிக்கும் பெரிதும் பாடுபட்டு வருபவர். பொதுநல ஊழியராகவும் உழைத்து வருபவர். திருச்சி ஒலிபரப்பும் நிலையத்தில் பெரிதும் தமிழ்ப் பாடல்களே பாடுதற்குரிய ஏற்பாடுகளைச் 82 செய்து வருபவர். கி.பி.20ஆம் நூற்றாண்டு.

வஜ்ஜிரவேல் முதலியார் = இவர் சைவ சமயத்தவர். பி.ஏ.பி.எல். பட்டம் பெற்றவர். கணித ஆசிரியராகக் காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிபவர். இவர் இத்துடன் சைவ சித்தாந்த நூற்களை நன்கு பயின்று நல்ல புலமை பெற்று அதன் சார்பில் பல அரிய சொற்பொழிவுகளை அருந்தமிழிலும், ஆங்கிலத்திலும் செய்து வருபவர். திருவள்ளுவரைப் பற்றிய ஒரு நூல் இவரால் எழுதப்பட்டுத் திருவள்ளுவர் சிறந்த சைவசித்தாந்தியாவார் என்பதை நிலைநாட்டியுள்ளார். சைவ சம்பந்தமான கட்டுரைகள் பலவற்றையும் எழுதியுள்ளவர். வட மொழியும் அறிந்தவர். கி.பி.20 ஆம் நூற்றாண்டு.

வடிவேல் செட்டியார். கோ. = இவர் வேதாந்தத்தில் ஒப்புயர்வற்ற அறிவுடையவர். இலக்கண அறிவில் தலை சிறந்தவர். சென்னை இந்து தியாலா