பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உந்மத்தம்

64

உபாசனம்


உந்மத்தம் = ஊமத்தை, பைத்தியம், மயக்கம்
உந்மத்தன் = பித்தன், வெறியன், பேய் கொண்டோன்
உபகரணம் = உதவி, கருவி, துணைக்காரணம்
உபகாரம் = காணிக்கை, உதவி, வேளாண்மை
உபக்கிரகணம் = பிடித்தல்
உபக்கிரமணம் = தொடக்கம்
உபக்கிரமணிகை = முகவுரை
உபக்கிரமம் = தொடக்கம்
உபக்கிரமித்தல் = தொடங்குதல்
உபசம்கை = உட்பிரிவு
உபசாரம் = ஒன்றன் தன்மையை மற்றொன்றன் மீது ஏற்றிக் கூறுவது,முகமன், மரியாதை
உபதிருட்டா = புரோகிதன், உடனிருந்து பார்ப்பவன்
உபசங்காரம் = அழிக்கை, ஆட்சேபம், மாற்று, விலக்குதல், ஒடுக்கம், முடிபுரை கூறுதல், நிக்கிரகம் செய்தல்
உபதேசம் = தீட்சை, போதனை
உபதை = ஒருவன் மன இயல்பை ஆராய்ந்து தெளிதல், காணிக்கை
உபநயனம் = மூக்குக்கண்ணாடி, பூணுால் அணியும் கிரியை
உபநிடதம் = வேதத்தின் ஞான காண்டம், வேதசார் நூல்
உபநியாசம் = முகவுரை, பிரசங்கம், தொடங்குதல்
உபபிரம்மா = தட்சண்
உபமேயம் = உவமிக்கப்படும் பொருள்
உபயம் = இரண்டு, உபகாரம், கோயிற் காணிக்கை
உபயவாதிகள் = இருதிறத்தார்
உபராகம் = கிரகணம்
உபலக்கணம் = ஒரு சொல் தன் இனத்தையும் தழுவுதல்
உபலம் = கல், இரத்தினக்கல், பளிங்குக்கல்
உபவனம் = பூங்கா
உபவீதம் = பூணூல்
உபாக்யாணம் = கிளைக்கதை
உபாங்கம் = ஒரு வகை தோற்கருவி, வேதாமங்களுக்கு அங்கமாயுள்ள சாத்திரங்கள்
உபாசகன் = உபாசனை செய்பவன்
உபாசனம் = வழிபாடு, வில் வித்தை