பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உரலாணி

67

உருத்திரன்


உரலாணி = உலக்கை
உரவக்காடு = மலைப்பயிர்
உரவம் = வலிமை, அறிவு
உரவர் = அறிவுடையோர், வலியுடையோர்
உரவு = அறிவு, வலி, மிகுதி, ஒலி, ஞானம், விடம்
உரவுதல் = உலாவுதல், வலியுறுதல்
உரவுநீர் = கடல், ஆறு, உப்புநீர்
உரவோர் = அறிஞர், வலியோர், முனிவர்
உரலுதல் = கோபித்தல், ஒலித்தல், முழங்குதல்
உரற்களம் = அறிஞர் சபை
உரற்றல் = பேர்ஒலி, ஒலித்தல்
உரன் = வெற்றி, பற்றுக்கோடு, திண்மை, அறிவு
உரால் = ஓடுதல்
உராவுதல் = பரத்தல், பெயர்தல், செல்லுதல், வலியடைதல்
உரி = தோல், மரப்பட்டை, அரைப்படியளவு, கொத்து மல்லி, உரிச்சொல்
உரித்து = உரிமை, உரிமையுடையது
உரிமை = நட்பு, சுதந்திரம், கடமை, அன்பு, அடிமை, தகுதி மூவினை
உரிவை = தோல், மரவுரி
உரு = அழகு, வடிவம், உடல், கோபம், மரக்கலம், நிறம், அச்சம், மிகுதி, சிலை, கரு, வெப்பம், பெருமை, மேன்மை, மான், அட்டை
உருக்கம் = அன்பு, இரக்கம்
உருக்கு = நெய், எஃகு
உருக்குமம் = பொன்
உருக்குருக்கு = கருப்பூரம்
உருங்குதல் = உண்ணுதல்
உருடை = வண்டி
உருட்டுதல் = வெல்லல், உருட்டுதல், வருத்துதல், மருட்டுதல்
உருத்தல் = கோபித்தல், முளைத்தல், கொள்ளுதல், வெப்பமுறச் செய்தல், அழலுதல், முளைத்தல், ஒத்தல், தோன்றுதல், சுரத்தல்
உருத்திரகணம் = சிவனடியார், சிவகணம்
உருத்திரகணிகை = தேவடியாள்
உருத்திரசாதநம் = உத்திராட்சமாகிய சிவ சின்னம்
உருத்திரபூமி = சுடுகாடு
உருத்திரமணி = உருத்திராட்சம்
உருத்திரம் = பெருங்கோபம்
உருத்திரன் = பெருங்கோபி, சிவன், அக்கினி