பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உலகம்

69

உலோச்சுதல்


உலகம் = உயர்ந்தவர், பூமி, உலகில் உள்ளவர்,ஒழுக்கம்
உலகாயதம் = ་ உலக இன்பமே மேலானது என்னும் நிரீச்சுரவாதம்
உலகியல் = உலக நடை, உலக வழக்கம்
உலக்கை = குத்து கருவி, திருவோண நாள், அழிவு
உலங்கு = கொசுகு, திரண்ட கல்
உலண்டு = பட்டு நூலை உண்டாக்கும் ஜந்து, கோல்புழு
உலத்தல் = அழிதல், சாதல், கெடுதல், குறைதல், நீங்குதல், வற்றுதல், முடிதல்
உலப்பு = கேடு, சாவு, முடிவு, அழிவு, குறைவு, அளவு, உதவுதல்
உலமரல் = சுழற்சி, துன்பம், வருத்தம்
உலமருதல் = துன்பம், அச்சமுறுதல், துன்புறல்
உலம் = திரண்ட கல்
உலம்புதல் = ஒலித்தல்,அஞ்சுதல்
உலம்வரல் = சுழலல்
உலவல் = குறைதல்
உலவாக்கிழி = எடுக்க எடுக்கப் பொருள் குறையாக் கிழிக் கட்டு
உலவுதல் = குறைதல், ஒழிதல்
உலவை = காற்று, தழை, கொம்பு,ஓடை மரம், கிளை, கிலுகிலுப்பை, குடி
உலறல் = கடுங்கோபம், வற்றல்
உலறுதல் = கோபித்தல், அழகுகெடுதல், சிதைதல்
உலா = பவனி வருதல் , ஒரு வகைப் பிரபந்தம்
உலுத்தம் = பொருள் ஆசை
உலுப்பை = காணிக்கை, ஊண் பண்டம்
உலுகம் = கோட்டான்
உலூகலம் = மர உரல்
உலூதை = எறும்பு, சிலந்தி
உலைக்களம் = அடுப்பு, கொல்லன் உலை
உலைதல் = அலைதல், அழிதல், நிலை குலைதல்,வருந்துதல், அஞ்சுதல், கலைந்து போதல்
உலைவு = அச்சம், அழிவு, தரித்திரம், கெடுதி , அலைவு, நடுக்கம், நிலையின்மை, தோல்வி
உலோகிதம் = சிவப்பு, மஞ்சள்
உலோசநம் = கண்
உலோச்சுதல் = தன் தலை மயிரைத் தானேபறித்தல்