பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உலோட்டம்

70

உவள்


உலோட்டம் = ஓடு, மண்ணாங்கட்டி
உலோபம் = ஆசை, குறைவு, ஈயாக் குணம்
உலோபாமுத்திரை = அகத்தியர் மனைவி
உல் = கழு, தேங்காய் உரிக்கும் கருவி
உல்கு = சுங்கம்
உல்லங்கனம் = கடந்து போதல், அவமதிப்பு
உல்லரி = தளிர்
உல்லாபம் = மழலைச் சொல்
உல்லியர் = கிணற்று நூல் அறிந்தவர்
உல்லேகம் = உச்சரிப்பு
உல்லோலம் = கடற்பெருந்திரை
உவகை = மகிழ்ச்சி, அன்பு
உவட்டு = அருவருப்பு, நீர்ப் பெருக்கு
உவணம் = கருடன், உயர்ச்சி, கழுகு
உவணவூர்தி = விஷ்ணு
உவணன் = கருடன்
உவணை = தேவலோகம்
உவண் = உவ்விடம், மேலிடம்
உவதி = இளம் பிராய மாது
உவத்தல் = மகிழ்தல்
உவப்பு = பொலிவு, மகிழ்வு
உவமன் = ஊமை,உபமானம்
உவமானம் = சமானம்
உவராகம் = கிரகணம்
உவரி = கடல், மகளிர் விளையாட்டு, உவர் நீர், மூத்திரம்
உவர் = உப்பு, உவர்ப்பு, களர்நிலம், உழமண், கடல், இனிமை, வெறுப்பு
உவர்க்கம் = கடற்கரை
உவர்த்தல் = வெறுத்தல்
உவர்ப்பு = ஆசை இல்லாமை, துவர்ப்பு, உப்புச் சுவை, இகழ்ச்சி, வெறுப்பு
உவலை = பொய், தழை, ஓட்டை, சருகு, இழிவு
உவலைக் கூவல் = தழை மூடிய கிணறு
உவல் = தழை, சருகு, இழிவு
உவவு = உவப்பு, தவம், உவா
உவளகம் = சிறைச்சாலை, குளம், அந்தப்புறம், உப்பளம், இடைச்சேரி, மதில், ஒரு பக்கம், அகழி
உவளல் = துவளல்
உவளித்தல் = பரிசுத்தம் செய்தல்
உவளுதல் = துவளுதல், நடுங்கல், பரத்தல்
உவள் = இடையில் உள்ளவள்