பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உவறுதல்

71

உழையர்


உவறுதல் = சுரத்தல், ஊற்றுதல்
உவனித்தல் = வில்லைச் செலுத்தத் தொடங்கல், தூய்மை செய்தல்
உவன் = நடுவில் உள்ளவன், முன் நிற்பவன்
உவா = அமாவாசி, பெளர்ணமி, யானை, இளையோன், பருவகாலம், இளமை, கடல்
உவாதி = எல்லை, பெருந்துன்பம்
உவாமதி = பூரண சந்திரன்
உவித்தல் = அவித்தல்
உள் = உவ்விடம், உவை
உவ்வி = தலை
உழக்குதல் = கலக்குதல், மிதித்தல், கொன்று திரிதல், உழுதல், வெல்லல், விளையாடுதல்
உழத்தல் = வருந்துதல், வெல்லுதல், செய்தல், முயலுதல், பழகல்
உழப்பு = முயற்சி, பழக்கம், வருத்தம், குழப்பம், வலிமை
உழலை = பெருந்தாகம், ஒரு மரம், செக்கின்பிழி மரம், குறுக்குமரம், கணையமரம்
உழவடை = உழவு நிலத்தின் குடியுரிமை
உழவாரம் = புல் களையும் கருவி
உழவுகோல் = சவுக்கு, முள் உள்ள கொம்பு
உழறுதல் = கலங்குதல், கலக்குதல், சுழலுதல், உலாவல், அளைதல்
உழற்சி = சுழற்சி, திரிதல், வருத்தம்
உழி = இடம், அளவு, பக்கம், பொழுது
உழிஞை = சிறு பூனை, ஒரு மரம்
உழிஞ்சில் = வாகை மரம்
உழிதரல் = திரிதல், சுழலுதல்
உழு = பிள்ளைப்பூச்சி
உழுதுாண் = பயிர் இட்டுப் பிழைத்தல்
உழுபடை = கலப்பை
உழுவம் = எறும்பு
உழுவல் = தொடர்ந்த அன்பு, குணம்
உழுவை = புலி, மீன்வகை
உழை = அருகு, மான், பக்கம், இடம், உவர்மண், பூ இதழ், விடியற்காலம், உஷாதேவி
உழைக்கலம் = பொன் வெள்ளியாலான ஆளும் பாத்திரம்
உழைத்தல் = வருந்தல்
உழையர் = பக்கத்தில் இருப்பவர், மந்திரிகள், ஏவல் செய்பவர்