பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உற்கம்

75

உஃது


உற்கம் = எரிகொள்ளி, தீத்திரள்
உற்கல் = எரிந்து வீழ்தல்
உற்காதம் = ஆரம்பம்
உற்கிருஷ்டம் = மேன்மையானது
உற்கிதம் = பிரணவம், சாமவேதம் பாடுதல்
உற்குரோசம் = நீர் வாழ் பறவை
உற்கை = விண் மீன், நெருப்புக் கொள்ளி, விண்வீழ் கொள்ளி
உற்சர்ப்பிணி = உலகம், வாழ்நாள், போகம் முதலியன நாளுக்குநாள் பெருகும் காலம்
உற்பலம் = குவளை, செங்கழு நீர் மலர்
உற்பாதம் = கொடுமை, துர்க்குறி
உற்பவம் = பிறப்பு
உற்பிரேட்சை = தற்குறிப்பேற்றம்
உற்பீசம் = நிலத்தில் பிறப்பன, வித்து வேர் முதலியவற்றினின்றும் பிறப்பன
உற்பூதம் = காணப்படுவது
உற்றது = நடந்த உண்மை, ஆபத்து
உற்றறிதல் = ஆராய்ந்து அறிதல், தொட்டறிதல்
உற்றார் = நண்பர், உறவினர், முயல்பவர், உடையவர்
உற்றிடம் = ஆபத்து வந்த காலம்
உற்றுழி = ஆபத்து வந்த இடம்
உன்மத்தம் = மயக்கம், வெறி, ஊமத்தம்
உன்மாதம் = மயக்கம்
உன்முகம் = மேல் நோக்கம், ஒன்றில் கருத்தாய் இருத்தல்
உன்னதம் = மேன்மை, உயர்ச்சி
உன்னம் = ஒரு மரம், மனம், நினைவு, ஒரு பறவை, கருத்து, தியானம், வகை
உன்னலர் = பகைவர்
உன்னல் = நினைத்தல், மனம்
உன்னித்தல் = உயர்தல்
உன்னிப்பு = கவனிப்பு, புத்திக் கூர்மை, குறிப்பு
உன்னுதல் = சிந்தித்தல், விரைந்து எழும்பல்
உஃது = உது