பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


= மாமிசம், தசை
ஊகம் = கருங்குரங்கு, அறிவு, ஒருபுல், கருத்து, மனமயக்கம், படைவகுப்பு, ஊமத்தை
ஊகித்தல் = உத்தேசித்தல், ஆராய்தல், யோசித்தல்
ஊகை = கல்வி, ஊகம்
ஊக்கம் = முயற்சி, வலி, உள்ளக்கிளர்ச்சி, உற்சாகம், குறிக்கோள், உயர்ச்சி, உண்மை
ஊக்கலர் = முயற்சியுடையவர்
ஊக்கம் = முயலுதல், மிகுதி
ஊக்குதல் = அசைத்தல், ஆட்டல், எழுப்பல், முயலுதல், கற்பித்தல், நினைத்தல்
ஊங்கனோர் = முன்னுள்ளோர்
ஊங்கண் = முன்பு
ஊங்கு = உவ்விடம், மேல், நடுமுன், மிகுதி, மேம்பட்டது
ஊங்குதல் = ஆடுதல்
ஊசரம் = உவர்மண்
ஊசல் = ஊழல், அசைதல், ஊஞ்சல், பதனழிந்தது
ஊசல்வரி = ஊஞ்சல் பாட்டு
ஊசி = எழுத்தாணி, சிறுமை, வடதிசை
ஊசுதல் = சீவுதல், அழுகுதல், சுவைகெடுதல்
ஊச்சுதல் = உறிஞ்சுதல்
ஊடரம் = உவர்நிலம்
ஊடல் = பொய்க்கோபம் கொள்ளல், தலைவி தலைவனிடம் கொள்ளும் சிறு கோபம்
ஊடறுத்தல் = நடுவறுத்தல், வழக்குத்தீர்த்தல்
ஊடாடுதல் = பழகுதல், சஞ்சரித்தல், பெரு முயற்சிசெய்தல், கலத்தல்
ஊடாட்டம் = பழக்கம்
ஊடு = நடு, உள், நெசவின் தார் நூல்
ஊடுசெல்லல் = இடையே போதல்
ஊடுதல் = பிணங்குதல், வெறுத்தல், பிரிதல்
ஊடுறுவுதல் = துளைத்தல், நுழைதல்
ஊடேயூடே = இடையிடையே, அடிக்கடி, இங்கும் அங்கும்
ஊடை = ஆடையின் குறுக்கிழை
ஊடையம் = நீரரண்
ஊட்டம் = உண்டி, செழிப்பு