பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஊர்த்துவபுண்டரம்

78

ஊன்றுதல்


ஊர்த்துவபுண்டரம் = நெற்றியில் மேல் நோக்கியிடும் குறி
ஊர்த்துவம் = மேல்
ஊர்மி = திரை
ஊர்மிளை = இலக்குவன் மனைவி
ஊர்முகம் = படைகள் சண்டை செய்யும் இடம்
ஊழி = பூமி, வாழ்நாள், நெடுங்காலம் யுகமுடிவு விதி, முறைமை
ஊழித்தீ = வடவாமுகாக்கினி
ஊழி நாயகன் = சங்கார கர்த்தாவான சிவன்
ஊழுறல் = முதிரல்
ஊழுறுதல் = குடைதல், முடிவு பெறுதல்
ஊழை = பித்தம்
ஊழ் = முறை, விதி, பழமை பழவினை, முடிவு, முறைமை, தடவை, முதிர்ச்சி, மலர்ச்சி, நீதி, சூரியன்
ஊழ்குதல் = தியானித்தல்
ஊழ்த்தல் = உதிர்த்தல், கழலுதல், ஊன், பதன் அழிவு, மலர்தல், நினைத்தல், முதிர்தல், பருவம், அழகுகெடுதல், சொரிதல், சிறத்தல், இறைச்சி, முடைநாற்றம், நரகம்
ஊழ்வினை = பழவினை, உழுவல் அன்பு
ஊளன் = நரி
ஊறணி = ஊற்று நிலம், வருவாய், சேற்று நிலம்
ஊறல் = சாறு, வருவாய், ஊறுதல், தினவு, ஊற்று, களிப்பு
ஊறு = துன்பம், காயம், உறுதல், தீண்டல், தீமை, குற்றம், புண்,கொலை
ஊறுகோள் = கொலை, காயம்
ஊறுபாடு = தீமை, துன்பம்
ஊறை = சவ்வரிசி
ஊற்றம் = பற்றுக்கோடு, முயற்சி, மிகுதி, வலி, நீர் ஊறல், மேம்பாடு, பழக்கம், கேடு, இடையூறு
ஊற்றால் = மீன் பிடிக்கும் கூடு
ஊற்று = ஊன்று கோல், நீர் ஊற்று, ஆதரவு
ஊற்றுக்களம் = பலரும் வந்து சேரும் இடம்
ஊற்றுமரம் = செக்குலக்கை
ஊனம் = கேடு, குறைபாடு, பழி, குற்றம், அழிவு, பிணம், ஈனம்
ஊன் = உடல், மாமிசம், கொழுப்பு
ஊன்கணார் = மானிடர்
ஊன்று = சார்பு
ஊன்றுதல் = பதித்தல், நடுதல், அமர்த்தல், பலப்படுத்தல், கடைப்பிடித்தல், தள்ளுதல், தாங்குதல், பற்றுதல், நிலைபெறுதல், குத்துதல்