பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


= ஏழ் என்னும் எண்ணைக் குறிக்கும் எழுத்து
எகினம் = அன்னம், கவரி மா, நாய், புளிமா, புளிய மரம், நீர் நாய்
எகினன் = பிரமன்
எகின் = புளியமரம், அன்னம்
எக்கண்டம் = முழுதும்
எக்கர் = இடுமணல், இடக்கர், மணற்குன்று, ஏறுதல், இறுமாப்புடையவர், குவிதல்,சொரிதல், நுண்மணல்
எக்களிப்பு = பெருமகிழ்ச்சி
எக்காளம் = ஓர் ஊதுகுழல்
எக்கி = நீர்வீசும் கருவி
எக்கியம் = யாகம்
எக்கியோபவீதம் = பூணூல்
எக்குதல் = எட்டுதல், வயிற்றை உள்இழுத்தல், குவிதல்
எங்கணும் = எவ்விடத்திலும்
எங்கண் = எவ்விடம்
எங்கித்தை = எவ்விடம்
எங்கை = என் தங்கை
எங்கனம் = எவ்விதம், எவ்விடம்
எசம் = நரம்பு
எச்சமிடுதல் = பறவை மலம் விடுதல்
எச்சம் = குறை, சந்ததி, யாகம், மிச்சம், எச்சில், பறவை மலம், மக்கள், பிள்ளைப் பேறு, செல்வம், தொக்கு நிற்பது, முன் வைத்த பொருள், ஒரு வாசனைப்பொருள்
எச்சன் = யாகம் செய்வோன், யாக அதிதேவதை, அக்கினி
எச்சு = உயர்வு, உயர்ந்த ஒசை, குறைவு
எஞ்சலார் = புதியவர்
எஞ்சலித்தல் = குறைவுசெய்தல்
எஞ்சுதல் = குறைதல், ஒழிதல், சாதல், மிஞ்சுதல்
எஞ்ஞான்றும் = எப்பொழுதும்
எடார் = வெளிநிலம்
எடுத்தல் = வீடு கட்டல், பொருந்தல், எழுப்புதல், தூக்குதல், தரித்தல், உயர்த்துதல், சுமத்தல், ஓர் ஓசை, அங்கீகரித்தல்
எடுத்தன் = பொதிமாடு
எடுத்துக்காட்டு = உதாரணம்