பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எமன்

82

எரிவனம்


எமன் = நம்முடையவன், இயமன், சுற்றத்தான்
எமி = தனிமை, கூடி இருப்போன்
எம்பரும் = எவ்விடத்தும்
எமர் = எம்மவர்
எம்பி = என் தம்பி
எம்பிராட்டி = எம் தலைவி
எம்மனோர் = எம்மோடு ஒத்தவர்
எம்மான் = எம்பிரான், தந்தை, என்மகன்
எம்முன் = என் அண்னன்
எம்மை = எங்களை, எப்பிறப்பு, எம் தலைவன்
எம்மோன் = எம் தலைவன்
எயில் = மதில், நகரம், அரண்
எயிறலைத்தல் = கோபித்து பல்லைக்கடித்தல்
எயிறு = பல், பன்றிக்கொம்பு, யானைக்கொம்பு
எயிறுதின்றல் = பற்களைக் கடித்தல்
எயிற்றி = பாலை நிலப்பெண், வேட்டுவப் பெண்
எயினன் = வேடன்
எயின் = வேடர் ஜாதி
எய் = முட்பன்றி, அம்பு, துன்பம்
எய்த = நன்றாக, நிரம்ப
எய்துதல் = அடைதல், சம்பவித்தல், அணுகுதல், சேர்தல், பணிதல், நீங்குதல், பொருந்துதல், உண்டாதல், போதியதாதல்
எய்த்தல் = சோம்புதல், அறிதல், இளைத்தல், வருந்துதல், ஓய்தல்
எய்ப்பில்வைப்பு = ஆபத்தில் உதவும் பொருள்
எய்ப்பு = இளைப்பு, வறுமைக்காலம்
எய்ப்போத்து = ஆண் முள்ளம்பன்றி
எய்யாமை = அறியாமை, வருந்தாமை
எரி = தீ, கார்த்திகை, பிரபை, இடபராசி, நரகம், வெம்மை, கந்தகம்
எரிசுடர் = அக்கினி, விளக்கு
எரிச்சல் = பெருங்காயம், பொறாமை, கோபம், எரிதல்
எரிநகை = வெட்சிமலர்
எரிப்பு = பொறாமை, எரிக்கை
எரிமலர் = முருக்குமலர், செந்தாமரை
எரியல் = ஒளிவிடுகை, எரிவு
எரியாடி = சிவன்
எரியோம்பல் = அக்கினி காரியம் செய்தல்
எரிவந்தம் = எரிச்சல், நோய், கோபம்
எரிவனம் = சுடுகாடு