பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எழு

84

எறும்பி


எழு = வளைதடி, கம்பம், எஃகு, கணையம், குறுக்கு மரம்
எழுச்சி = இறுமாப்பு, எழும்புதல், மனமுயற்சி, பிறத்தல், தோற்றம்
எழுதகம் = சித்திரவேலை
எழுதருதல் = எழும்புதல்
எழுதல் = எழுதுதல், எழுந்திருத்தல், தொடங்குதல், தோன்றுதல், புறப்படுதல், உயர்தல், பெயர்தல், மிகுதல், வளர்தல், உயிர் பெற்றெழுதல், பரவுதல்
எழுதாக்கிளவி = வேதம்
எழுத்தாளர் = அறிஞர்
எழுத்து = இலக்கிய நூல், இலக்கண நூல், கல்வி, எழுத்து, கடிதம், மந்திரம்
எழுநா = அக்கினி
எழுபிறப்பு = தேவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் ஆகிய ஏழு பிறவிகள்
எழுப்பம் = உயர்ச்சி, எழுச்சி
எழுமை = உயர்ச்சி, ஏழு, ஏழு பிறப்பு
எழுவாய் = ஆதி, கருத்தா, தொடக்கம்
எளிதரவு = வறுமை, தாழ்மை
எளிமை = தளர்வு, அறிவில்லாமை, தரித்திரம், தாழ்வு
எளிவந்தது = எளிதில் கிடைத்தது
எள் = நிந்தை, சிற்றறிவு, எள்
எள்குதல் = கூசுதல், இகழ்தல், அஞ்சுதல்
எள்ளல் = இழிவாகப் பேசுதல், தள்ளல், நிந்தை
எள்ளுதல் = வருந்துதல், கூசுதல், அஞ்சுதல், இகழ்தல்
எள்ளோரை = எள்ளுச்சாதம்
எறி = குறிப்பாகக் கூறுதல், எறிதல்
எறிகால் = பெருங்காற்று
எறிகாலி = உதைக்கும் பசு
எறிதரல் = எறிதல்
எறிதல் = உதைத்தல், போர் செய்தல், அடித்தல், குத்தல், முட்டுதல், மோதுதல், வெல்லுதல், வெட்டல், முறித்தல், வீசல், கடத்தல், எற்றல், துள்ளுதல், கத்தரித்தல், சீர்ப்படுத்தல்
எறித்தல் = ஒளி வீசுதல், பரத்தல், தைத்தல், உறைத்தல்
எறிபுனம் = வெட்டிச் சுட்ட கொல்லை நிலம்
எறிப்பு = ஒளி, கடுவெயில்
எறும்பி = யானை