பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏந்திழை

89

ஏலா


ஏந்திழை = பெண், அழகிய, ஆபரணம்
ஏந்துதல் = சிறத்தல், மிகுதல், சுமத்தல்
ஏந்தெழில் = மிக்க அழகு
ஏப்பாடு = அம்பு விழும் எல்லை
ஏப்புழை = மதிலின் அம்புத் துவாரம்
ஏமகூடம் = பொன்மலை
ஏமந்தம் = பனி
ஏமந்தருது = முன் பனிக்காலம்
ஏமம் = மகிழ்ச்சி, களிப்பு, பயித்தியம், ஐயம், பொன், சேமம், காவல், உறுதி, இரா, பள்ளியறை, மயக்கம், விபூதி, இடுதிரை
ஏமருதல் = கலங்குதல், திகைத்தல், காக்கப்படுதல், மிகுகளிப்புறல்
ஏமன் = எமன்
ஏமாத்தல் = இன்புறுதல், அரணாதல், ஆசைப்படுதல், கலக்கமுறுதல், களித்தல், செருக்குதல், மயங்குதல், நிச்சயித்தல்
ஏமாப்பு = சேமம், செருக்கு, கருத்து, மயக்கம், களிப்பு
ஏமார்தல் = மனம் கலங்குதல், அரணாதல்
ஏமார்த்தல் = காப்புச் செய்தல், பலப்படுத்துதல்
ஏமுறுதல் = சேமம் அடைதல், இறுமாப்புறல், தன்மை திரிதல், களிப்புறல், மயங்குதல், வருந்துதல், பொருத்த முறுதல்
ஏம் = செருக்கு, இன்பம், மயக்கம்
ஏம்பல் = வருத்தம், களிப்பு, அவா, ஆரவாரம்
ஏயம் = தள்ளத்தக்கது
ஏய்தல் = ஒப்பாதல், பொருந்தல், எதிர்ப்படுதல், அடைதல், தகுதல்
ஏய்த்தல் = ஒத்தல், வஞ்சித்தல், தழுவல், பொருந்தச் சொல்லுதல்
ஏரம்பன் = வினாயகன்
ஏரல் = கிளிஞ்சில்
ஏராண்மை = உழவு
ஏராளர் = உழுநர்
ஏர் = அழகு, எழுச்சி, நன்மை, ஒப்பு, கலப்பை, உழவு மாடு, உழவு, பொருந்திய
ஏர்பு = எழுச்சி, எழுந்து
ஏல = மிக, முன்னமே, ஏடி
ஏலம் = இயலல், ஒத்தல், பொருந்தல், அங்கீகரித்தல்
ஏலா = தோழி முன்னிலை, தோழன் முன்னிலை

12