பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏலாதன

90

ஏன்று கொள்ளுதல்


ஏலாதன = தகாதன
ஏலாதார் = பகைவர்
ஏலாமை = இணங்காமை, பொருந்தாமை, இயலாமை
ஏலுதல் = பொருந்துதல்
ஏல் = பொருத்தம், உணர்ச்சி, மன எழுச்சி
ஏல்வை = காலம், குளம், நாள்
ஏவதும் = எல்லாமும், ஒவ்வொன்றும்
ஏவம் = இகழ்ச்சி, குற்றம், இவ்விதம்
ஏவல் = வறுமை, கட்டளை, பணிவிடை, வேலையாள்
ஏவு = அம்பு
ஏழகம் = ஆடு
ஏழில் = இசை, ஒருமலை
ஏழை = அறிவிலி, உமாதேவி, பெண், தரித்திரன்
ஏழைமை = வறுமை, ஏழு, அறியாமை
ஏழ்பரியோன் = சூரியன்
ஏளிதம் = இகழ்ச்சி
ஏறங்கோள் = முல்லைப்பறை
ஏறு = எருது, உயர்ச்சி, இடியேறு, ஏறுதல், மிகுதி, விலங்குகளில் ஆண்பால், ஆண்சிங்கம், உயரம்
ஏறுதழுவல் = வீரமுள்ள இடபத்தை விரட்டிவிட அதனை வீரன் அடக்கிக்கட்டிக் கொணர்தல்
ஏறுழவர் = படைவீரர்
ஏற்க = இணங்க, பிச்சைவாங்க
ஏற்பது = இரப்பது
ஏற்பு = இரப்பு, தகுதி, பொருத்தம்
ஏற்புழி = ஏற்குமிடத்து
ஏற்போர் = இரப்போர்
ஏற்றனை = சிம்மாசனம்
ஏற்றம் = புகழ், மேன்மை, துணிவு, அதிகம், நினைவு
ஏற்றல் = இரத்தல், எரித்தல்
ஏற்றார் = பகைவர்
ஏற்று = மரத்தினால் செய்த மேடை
ஏற்றுப்பனை = ஆண்பனை
ஏற்றுாண் = இரந்துண்ணும் உணவு
ஏற்றை = ஆண்கரடி, ஆண்சிங்கம்
ஏனம் = பன்றி, பாத்திரம், பாவம், ஓலைக்கலம்
ஏனல் = தினைப்புனம், கதிர், தினை
ஏனாதி = படைத்தலைவன், மந்திரி, அம்பட்டன், ஒரு பட்டம்
ஏனை = ஒழிந்த, எத்தன்மைத்து
ஏன்றது = இயன்றது
ஏன்று கொள்ளுதல் = ஏற்றல்