பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒலி

94

ஒள்


ஒலி = காற்று, இடி, ஓசை, சொல்
ஒலிதல் = தழைத்தல்
ஒலித்தல் = தழைத்தல், ஆடையின் அழுக்கு நீக்கல், விளக்குதல்
ஒலியல் = சீலை, தீ, தெரு, தோல், தழைக்கை, தளிர், பூமாலை, ஒலித்தல், நதி, மயிற்பீலிக்குஞ்சம், மேலாடை
ஒலுங்கு = கொசு
ஒல் = முடிவிடம்
ஒல்குதல் = குழைதல், துவளல், நுடங்குதல், நாணுதல், வறுமைப்படுதல், மனம் அடங்குதல், சுருங்குதல், தளருதல், ஒதுங்குதல், கெடுதல், குறைதல், வளைதல்
ஒல்லல் = இயலல், பொருந்தல்
ஒல்லாங்கு = பொருந்துமாறு
ஒல்லாமை = இகழ்ச்சி, வெறுப்பு, பொருந்தாமை
ஒல்லார் = பகைவர்
ஒல்லுதல் = அடைதல், இணங்குதல், பொறுத்தல், இயலுதல், நிந்தித்தல், தகுதல், நிறைவேற்றுதல், பொருந்துதல், விரைதல், ஒலித்தல்
ஒல்லை = சீக்கிரம், பழமை, சிறுமை
ஒவ்வுதல் = இசைதல், பொருந்துதல்
ஒழிதல் = தங்குதல், எஞ்சுதல்
ஒழிபு = மிச்சம்
ஒழுக = மெதுவாக
ஒழுகல் = உயர்ச்சி, நடை, ஒழுகுதல், இளகுதல், முறையாக நடத்தல், வளர்தல், போதல், நீளம்
ஒழுகு = உயரம், ஒழுங்கு, நீளம்
ஒழுகுமாடம் = உடல்
ஒழுகை = வண்டி
ஒழுக்கம் = உயர்ச்சி, மரியாதை, வழி மேன்மை, நெறி, சீலம், நன்னடக்கை, செல்லுகை
ஒழுக்கல் = எழுச்சி
ஒழுக்கு = ஒழுக்கம், வரிசை
ஒழுங்கை = இடுக்குவழி
ஒளி = அறிவு, கடவுள், சிவசக்தி, தீ, சந்திரன், சூரியன், பார்வை, தலைமை, பிரகாசம், புகழ், நன்மதிப்பு, காந்தி, விளக்கு, நட்சத்திரம், கட்புலன், தோற்றம், அழகு
ஒளிக்கடல் = பற்கள்
ஒளிவட்டம் = கண்ணாடி, சந்திரன்
ஒளுகை = வண்டி
ஒள் = அழகு, உண்மை, ஒளி, மேன்மை, நல்ல அறிவு