பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

தமிழ் இலக்கிய வரலாறு


பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பலவும் சமணர்கள் எழுதியனவே. (சங்கம் மருவிய காலத்தில் 'பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்' என்னும் தலைப்பிற் காண்க.) அடுத்துக் கி. பி. 470- இல் வச்சிர நந்தி சங்கத்தினை மதுரையில் சமணர் நிறுவித் தமிழ்த்தொண்டும் சமயத் தொண்டும் செய்தனர். 'அருங்கலச் செப்பு' எனும் நூல் குறட்பாக்களாலாயது. 'அருங்கலான் வயம்' எனும் அறிஞர் கூட்டத்தினைச் சேர்ந்த சமணர் ஒருவரால் இந் நூல் இயற்றப்பட்டது என்பர். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுக்குக் காலத்தாற் பிற்பட்டதாகும். 'அறநெறிச் சாரம்' என்ற நூலினை முனைப்பாடியார் எனும் சமணசமயப் புலவர் இயற்றினார். வெண்பா யாப்பில் அமைந்த நூல் இது. 'மறவுரையும் காமத் துரையும் மயங்கிப் பிறவுரை யும் மல்கிய ஞாலத்து அறவுரை கேட்கும் திருவுடையாரே பிறவியை நீக்கும் திருவுடை யார்., என்ற அடிப்படையில் இந்நூல் எழுந்ததாகும். இந் நூலின் காலம் கி.பி. பதினான்காம் நூற்றாண்டெனலாம். அறநிலைக் கதைகள் திருத்தக்க தேவர் பாடிய நரிவிருத்தம் சிறப்புடைய தாகும். குழந்தைகளுக்கேற்ற அற நூல்களாகக் காணப் படும் கிளி விருத்தம், எலி விருத்தம், நரி விருத்தம் முதலியன சமணர்கள் எழுதிய நூல்கள் என்பது தேவாரத்தால் தெரிய வருகின்றது. -- - சமணர் இயற்றிய காப்பியங்கள் (1) சிலப்பதிகாரம். (2). சிந்தாமணி, (3) வளையாபதி, (4) பெருங்கதை, (5) சூளாமணி, (6) நீலகேசி, (7) உதய ணன் கதை, (8) தாக குமார காவியம், (9) மேரு மந்திர