பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

304

தமிழ் இலக்கிய வரலாறு


அமெரிக்கச் செல்வாக்கு

1910-ம் ஆண்டில் அமெரிக்காவில் பழைய ஆங்கில யாப்புக் கட்டுக்கோப்புகளை எதிர்த்து 'வால்ட் விட்மன்' என்பவர் எதிர்க்குரல் கொடுத்தார்.

"யாப்பு பழமையின் சின்னம்! நிலப்பிரபுத்துவத்தின் எச்சம்! புதிய இலக்கியத்தின் உரைநடைக்கும் செய்யுளுக்கும் இடையே எவ்வித வேற்றுமையும் இருத்தல் ஆகாது! விஞ்ஞானம், சமுதாயம், ஆகியவற்றைப் பற்றி ஆழமாகவும் விரிவாகவும் எழுதவேண்டும் என்றால், கவிதைக்கும் உரைநடைக்கும் இடையே வேறுபாடு இருத்தல் ஆகாது! பழைய ஆங்கில யாப்பு அமைதிகள் - அடிமைத்தளைகள்!' என்று கூறுகின்றார் வால்ட் விட்மன். இதனால் புதுக் கவிதை (New Poetry) என்றும், பிரெஞ்சு இலக்கியத்தைப் பின்பற்றிக் கட்டற்ற கவிதை (Verse libre) என்றும் புதிய கவிதை முயற்சி தோன்றலாயிற்று. இஃது இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் 1910க்குப் பிறகு ஏற்பட்டது. ஏறத்தாழ இதே காலத்தில் தான் பாரதி தமிழில் 'வால்ட் விட்மன்' என்ற தலைப்பில் வசன கவிதை எழுதினார். 'வால்ட் விட்மனை', 'நகரம்' என்ற தம் கட்டுரையில் மகான் என்று குறிப்பிடுவதால் வால்ட் விட்மனின் தாக்கத்தால் எழுதத் தொடங்கினார் எனலாம். இவருக்குப்பின் புதுக்கவிதையில் நாட்டம் கொண்ட ந. பிச்ச மூர்த்தி அவர்களும் வால்ட் விட்மனின் தாக்கம் தன்னைப் பெரிதும் பாதித்தது எனக் கூறுகின்றார். வால்ட் விட்மனின் 'புல்லின் இதழ்கள்' என்ற யாப்பு மரபே கண்டிராத கவிதைத் தொகுப்பிலிருந்து (வசன கவிதை) சில பகுதியை மொழிபெயர்த்து. 'மனிதனைப் பாடுவேன்' என்ற தலைப்பில் ச. து. சு. யோகி அவர்கள் வெளியிட்டனர்.

வால்ட் விட்மனைத் தொடர்ந்து புதுக்கவிதைக்குத் தொடர்ந்து ஆக்கம் தந்தவர் எஸ்ரா பெளண்ட்(Ezre Bount) என்பவர் ஆவார். 1912-ம் ஆண்டில் டின்டன் என்பவருடன்