பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306

தமிழ் இலக்கிய வரலாறு


இந்திய மொழிகளிலும் இப்பாதிப்பு ஏற்பட்டது. தமிழும் இதிலிருந்து தப்பவில்லை.

பொதுவாக நோக்கும்போது, உரைநடையின் செல்வாக்கு, மரபுக் கவிதையின் செறிவின்மை, சனநாயகத்தால் விளைந்த கட்டுப்பாட்டு வெறுப்பு, அமொிக்க நாட்டு செல்வாக்கு என இவை தமிழில் புதுக்கவிதை தோன்றுவதற்குக் காரணமாயின. ஆய்ந்து நோக்கினால், இவற்றுள் எதுவும் திட்டமிட்டு நுழைக்கப்பட்டது அல்ல என்பதும், அறிவியல் ஊழியின் பரிணாமம் என்பதும், சன நாயக ஊழியின் இலக்கிய விளைச்சல் என்பதும், ஆங்கிலக் கல்வியை விரும்பித் தழுவிய தழுவல் என்பதும் விளங்கும்.

கவிதையின் கண்ணோட்டம்

தமிழ்க் கவிதையின் நீண்ட வரலாற்றுச் சாரமாகத் திகழ்வது அதன் மானுடக் கண்ணோட்டம்தான். சங்கக்கவிஞர்கள் முதல் வள்ளுவன், இளங்கோ, சாத்தனார், கம்பன், பாரதி, பாரதிதாசன் வரை தமிழ்க்கவிதைக்கு ஒரு மானுடக் கண்ணோட்டம் உண்டு. இந்தக் கண்ணோட்டம் தான், வருங்காலத்தைப்பற்றி ஆக்க ரீதியான படைப்புக் கற்பனைதான் தமிழ்க்கவிதையில் தொடர்ந்துவரும் உயிர்ப்புள்ள சாராம்சமாகும். இந்த மனிதநேயக் கருத்துகள் இடம்பெறும் கவிதைகளின் தொடர்ச்சியாகத்தான் புதுக்கவிதை தோன்றி வளர்ந்து வருகிறது.

தமிழில் புதுக்கவிதை வளர்ச்சி

புதுக்கவிதை ஒரு தோற்றமல்ல; இது பரிணாம வளர்ச்சி என்று கூறும் பிரெஞ்சுத் திறனாய்வாளர் கஸ்டாவ் கான், மரபு யாப்புக் கவிதையிலிருந்து புதிய கட்டற்ற கவிதையின் தோற்றத்திற்கான காரணங்களைக் கூறும் போது. 'சந்தம் கண்ணுக்கு மிகையாகத் தோன்றுகிறது. அது மாற்றி அமைக்கப்படவேண்டும். அது துண்டிக்