பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

309


1. வசன கவிதை சற்று விரிவானது. சொற்செட்டு உடையது.

2. வசன கவிதையில் ஒருவித இசைநயத்தைப் பெரும்பாலும் காணலாம். ஆனால், புதுக் கவிதையில் ஒருவித ஓசை நாம் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், அது காதுக்கு எளிதில் பிடிபடுவதில்லை.

இந்த வகையில் நோக்கும்போது மீராவின் கனவுகள், கற்பனைகள், காகிதங்கள் என்ற நூலையும், நா. காமராசனின் கறுப்பு மலர்களையும் புதுக்கவிதைகள் என்று கூறுவதைவிட வசனகவிதை என்பதே பொருத்த முடைத்து.

எனவே, நீண்டு ஓரளவு ஓசைநயத்தோடு வருகின்றவற்றை வசனகவிதை என்றும், சுருங்கி, இறுகி, அந்த அளவிற்கு ஓசைநயம் இல்லாது வருவனவற்றைப் புதுக்கவிதை என்றும் குறிக்கலாம்.

புதுக் கவிதைக்கு எதிர்ப்பு

காலம் காலமாக மரபில் ஊறிய தமிழர்கள், அம் மரபை மீறி எழுந்த புதுக் கவிதைக்குப் பெரும் எதிர்ப்புப் தெரிவிக்கின்றனர்.

1. தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டு வரும் யாப்புக் கட்டுக்கோப்பில் நின்றே கவிதைகளைப் படைக்க முடியும்; அவ்வாறு இருக்க வீணே யாப்பையும் புறக்கணிக்கின்றனர்.

2. புதுக்கவிதைகளில் எவ்வித ஓசை ஒழுங்கும் இல்லை.

3. வசனத்திற்கும் இன்றையப் புதுக் கவிதைக்கும் இடையே வேற்றுமைகள் ஒன்றுமில்லை.

4. புதுக் கவிதையின் உள்ளடக்கங்களாகப் பாலும் பால் உறவும், விரக்தியுமே அமைகின்றன. இன்றைய சமூகத்தில் தெரியும் சிக்கலைப் பற்றிக் கவலை கொள்வ இல்லை.