பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

314

தமிழ் இலக்கிய வரலாறு


புதுக்கவிதையில் உணர்த்துமுறை

புதுக்கவிதைகள் சில புரியாமல் போவதற்கு உணர்த்து முறையின் ஒழுங்கின்மையே காரணமாகும்.

1. சொல்ல வருகின்ற எல்லாக் கருத்துகளையும் புதுக் கவிஞன் கூறுவதில்லை . சுவைஞர்களுக்குச் சில புரிந்து கோடல்களை அமைக்கின்றான்.

2. தான் கூறவரும் கருத்தினை இறுக்கமாகவும், செறிவாகவும் தரவேண்டும் என அவன் விரும்புகின்றான்.

3. தான் கூறவருகின்ற ஒன்றை மிகவும் நுட்பமாகக் கூறுகின்றான். சுவைஞனுக்கு அந் நுட்பத்தைப் புரிந்து கொள்ள இயலாமல் போகிறது.

4. தான் ஏதேனும் ஒருசில குறியீடுகள் வைத்துக் கொண்டு எழுதுவதால், அக் குறியீடுகள் என்ன என்று தெரிகின்றவரை புதுக்கவிதை புரிவதில்லை.

இரண்டாம் உலக
தமிழ் மாநாட்டுக்குத்
திறக்கப்பட்டன சென்னையில்
இருபத்தியொரு
புதிய லெட்ரீன்கள்.

இதில், சென்னையில் இருபத்தியொரு சிலைகள் திறக்கப்பட்டமையும், அவை பறவைகளுக்கு லெட்ரீன்களாக இருந்தமையும் குறிப்பாகப் புலப்படுத்தப்படுகிறது.

5. இலக்கிய மேற்கோள்கள், பழம் புராண இதிகாச மேற்கோள்கள் புதுக் கவிதையின் உள்ளாக உறைந்து புதுக்கவிதையைப் புதிர்க் கவிதையாக்கி விடுகின்றன.

எடு ஒருகல்
ஏசு வருமுன்
வீசி எறி