பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

315


ஏசு கதை தெரிந்தாலொழிய இக் கவிதையைச் சுவைப்ப தென்பது மிகவும் அரிது.

புதுக்கவிதையில் உணர்த்தும் முறையைக் காணும்போது தேவையான சொற்களை மட்டும் பெய்து கவிதையை உணர்த்தல். சில படிமங்களை அமைத்து உணர்த்தல், பொருளுக்கேற்ப எழுத்துகளை மாற்றி அமைத்து உரைத்தல், (கண்காட்சிக் கவிதை) அங்கதச் சுவை மிளிர உணர்த்தல் முதலிய பல்வேறு வகைகளைக் கையாளுகின்றனர்.

கணவன்
நிரபராதி என்று
நிரூபிக்க
நாணத்தை
மறந்த
குற்றவாளி

'கண்ணகி' என்ற தலைப்பில் தேவையான சொற்களை மட்டும் வைத்துப் பாடப்பட்ட கவிதை.

பூவின் இதழ்ச் சுவருள்
வண்டு குரல் ஒலிகள்
மோதி மடிகிறது
முத்தத் திரை மறைவில்
பேச்சு புதைகிறது

தர்மு சிவராமுவின் இக் கவிதை படிமக் கவிதைக்குச் சான்றாகும்.

கவிதையில் கூறவரும் பொருளும் உருவமும் இறுகிச் செறிந்திருக்கவேண்டும். பொருளையும் உருவத்தையும் பிரிக்க முடியாதபடி பிணைந்திருக்கவேண்டும். உள்ளடக்கத் தின் ஆதிக்கம் உருவத்தில் புலப்பட வேண்டும். அதனைக் கண்காட்சிக் கவிதை என்கின்றனர்.