பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

318

தமிழ் இலக்கிய வரலாறு


என்ற கோ. கேசவனின் கவிதை ஆண்டாண்டுக் காலமாகப் புதிய கொத்தடிமையில் சிக்கித் தவிக்கும் இந்திய ஆத்மாவின் குரலாகக் கேட்கிறது.

இவ்வாறாகப் புதுக்கவிதைகளில் பேச்சு வழக்கின் பண்புகளும் காணப்படுகின்றன. யாரோ ஒரு தனிமனிதனின் ஒற்றைக் குரலாக இல்லாமல் வீழ்ந்த மானுடத்தின் எழுச்சிக் குரலாக அவை எதிரொலி செய்கின்றன.

புதுக் கவிதையும் பொதுவுடைமையும்

தனி உடைமைச் சமுதாயத்தை உடைத்தெறிந்து பொது உடைமைச் சமுதாயத்தைக் காணவேண்டும் என்ற துடிப்பினைப் புதுக்கவிகள் பல புலப்படுத்தி நிற்கின்றன.

ஜகத்தினில் அனைவர்க்கும் உணவில்லை எனவே
அரசினை அழித்திடுவோம் - முதலாளி
அரசினை அழித்திடுவோம்
தொட்டில் சனியன் தொடர்ந்தே அழுதது
தூங்கிய மனிதர்கள் சலித்தனர்
வட்டில் நோயால் தாயும் சேர்ந்தழ
வறுமை நோய்க்கு மருந்துகள் உண்டோ .

இக் கவிதைகளில் புதுக்கவிஞர் ஒருவர், பசிக்குக் காரணமான தனி உடைமைச் சமுதாயத்தை உடைத்தெறிய முன்னேறுகிற உலகப் பெரும்படையைச் சுட்டிக்காட்டி, அதன் வெற்றியால் உலகில் பசி அழியும் என்ற நம்பிக்கையை ஏழை உள்ளங்களில் எழுப்புகிறார்.

பூமிச் சருகாம் பாலையை
முத்து பூத்த கடல்களாக்குவேன்
புயலைக் கூறுபடுத்தியே - கோடிப்
புதிய தென்றலாக்குவேன்