பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

321


அமைகிறது. வெறும் இயற்கையை மட்டுமே அதன் அழகை மட்டுமே பாடுவது இன்றையப் புதுக்கவிஞர்களின் மரபாகத் திகழ்கிறது.

தளிர் பற்றிப் பாடவரும் நா. காமராசன் அவர்கள்.

இலைப்பிஞ்சு
விதைப்பட்டு
தாவர மின்னல்

வேர்த்தூ ரிகையின் ஓவியம்

என்றெல்லாம் அடுக்கிச் செல்கின்றார். கடலைப் பற்றிப் பாடும்போது,

வானத்திற்கும் பூமிக்குமாக
மழைநெசவு நடந்தபோது
அறுந்துபோன மின்னல் நூல்களை
நினைத்துப்போன மின்னல் நூல்களை
நினைத்துத்தான் நான்

அழுதுகொண்டிருக்கிறேன்

என்று கூறுவது கவியின்பம் நல்குவதாக அமைகிறது. வானவில்லைப் பற்றிப் பாடும்போது.

இயற்கை
ஒரு தூரிகையை சிருஷ்டிக்க எண்ணி
ஒரு ஓவியத்தை சிருஷ்டித்தது
அது தான் வானவில்
சொர்க்கத்திலிருந்து வீசியெறியப்படுகிற
துரும்புகூட

அழகாகத்தான் இருக்கிறது

என்று கூறுகின்றார்.

இவ்வாறாகப் புதுக்கவிதைகளில் இயற்கை எவ்விதத் தாக்கமும் இன்றி அழகுணர்ச்சிக்காக மட்டுமே கையாளப் படுகின்றது.

த.-21