பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

323


துறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச்
சூழல்புக்கோ
இறைவா தடவரைத் தோட் கென்கொ லாம்புகுந்

தெய்தியதோ'

என்று கூறப்படுகிறது. ஏழிசையின் சூழலில் இறைவன் ஆட்பட்டான் என்பது இதனால் பெறப்படுகின்றதன்றோ?

தமிழின் மிகப் பழமையான நூலான தொல்காப்பியம் கொண்டே தமிழ் இசையின் பழமையினை அறியலாம். தொல்காப்பியனார் எழுத்ததிகாரத்தின் முதல் இயலான நூல் (மரபியலின் இறுதி நூற்பாவில்,

'அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய

நரம்பின் மறைய என்மனார் புலவர்'

(தொல், எழுத்து. நூன்மரபு, நூ. 38)

என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் பொருளதிகாரத்தில் அகத்திணையியலில் கருப்பொருள்களைக் கூறுகின்றபொழுது,

'தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ

அவ்வகை பிறவும் கருவென மொழிப'

(தொல், பொருள், அகத். நூ. 13)

என்று தமிழ் இசைக் கருவிகளில் பழமையான யாழினையும் சுட்டியுள்ளார். எனவே, இசையோடு மட்டுமின்றி இசையினை எழுப்பத் துணைகோலும் யாழும் பழமையாய் வந்து கொண்டிருக்கிறது என்பதனை அறியலாம்.

இறையனார் களவியலுரையாசிரியர் முச்சங்க வரலாறு மொழியுமிடத்து - தலைச்சங்க வரலாறு கூறுமிடத்தில் - 'அவர்களாற் (தலைச்சங்கப் புலவர்கள்) பாடப்பட்டன எத்துணையோ பரிபாடலும் முது நாரையும் முதுகுருகும் களரியா விரையுமென இத் தொடக்கத்தக்கன' என்றும், கடைச் சங்கத்தைக் குறிக்குமிடத்தில் 'அவர்களாற் (கடைச்சங்கப் -