பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

324

தமிழ் இலக்கிய வரலாறு


புலவர்கள்) பாடப்பட்டன. நெடுந்தொகை நானூறும், குறுந்தொகை நானூறும், ஐங்குறுநூறும், பதிற்றுப்பத்தும், நூற்றைம்பது கலியும், எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும், சிற்றிசையும், பேரிசையுமென இத் தொடக்கத்தன" என்றும் குறிப்பிட்டுள்ளார். இக் குறிப்பினாலும் தமிழ் இசையின் பழமை தெற்றெனத் துலக்கமுறும்.

பெருநாரை, பெருங்குருகு, பஞ்சபாரதீயம், பஞ்ச மரபு. தாளசமுத்திரம், சச்சபுடவெண்பா, இந்திரகாளியம், இசை நுணுக்கம், பதினாறு படலம், தாளவகை யோத்து, இசைத் தமிழ்ச் செய்யுட்டுறைக் கோவை முதலிய எண்ணற்ற இசைத் தமிழ் நூல்கள் பழங்காலத்தில் வழக்கிலிருந்து பின்னர் வழக்கு வீழ்ந்துபட்டிருக்கும் என்பர்.

நமக்கு இன்று கிட்டும் இசை பற்றிய குறிப்புகளில் மிகப் பழமையானவை எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலில் காணப்படும் அரிய இசைக் குறிப்புகளாகும். பரிபாடல் கி. பி. முதல் நூற்றாண்டினைச்சேர்ந்த ஒரு நூலாகும். எழுபது பரிபாடலில் இன்று நமக்குக் கிட்டுவன இருபத்திரண்டேயாகும். ஒவ்வொரு பரிபாடலின் கீழும் அப்பாடலைப் பாடிய புலவரின் பெயர், இசை அமைத்தவரின் பெயர், யாழ், செந்துறை, வண்ணம், தூக்கு முதலியன குறிப்பிடப்பட்டுள்ளன. இக் குறிப்புகளை நோக்கினால் வளமார்ந்த தமிழிசையின் பழமையினையும் சிறப்பினையும் சுவைத்து இன்புறலாம்.

தமிழ்ப்பண்கள் நூற்று மூன்று என்று கொள்ளப்படும். 'பண்களாவன பாலையாழ் முதலிய நூற்று மூன்று' என்பர் பரிமேலழகர். பிங்கலந்தை நிகண்டு 'ஈரிரு பண்ணும் எழு மூன்று திறனும்' எனக் குறிப்பிடுகின்றது. பெரும்பண்களாவன பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி என்பனவாம். இந்நாற்பெரும் பண்களுக்கும் மொத்தம் இருபத்தொரு திறங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் பாலையாழ்த்திறம் ஐந்தாகவும், குறிஞ்சி யாழ்த்திறம் எட்டாகவும், மருத