பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

330

தமிழ் இலக்கிய வரலாறு


1891 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தமிழ் நாடக உலகில் மற்றொரு திருப்பம் ஏற்பட்டது. து. தா. சங்கரதாஸ் சுவாமிகள் என்னும் பெரியார் நாடக உலகில் நுழைந்தார். அவர் பழைய நாடகங்களை ஒழுங்குபடுத்திப் புதிய நாடகங்கள் பலவற்றை எழுதித் தாமே நடித்தும், ஆசிரியராயிருந்தும், தமிழ் நாடகக் கலைக்கு மகத்தான சேவை புரிந்தார். சங்கரதாஸ் சுவாமிகள் சுமார் 40 நாடகங்கள் எழுதியிருக்கிறார்.[1]

நாடகத் துறைக்குத் தொண்டாற்றிய பெருமக்களுள் சிலரைப் காண்போம்.

பெ. சுந்தரம் பிள்ளை

திரு. பெ. சுந்தரம் பிள்ளை 1855 ஆம் ஆண்டு ஆலப்புழையில் பிறந்தவர். இவர் மனோன்மணீயம் என்று தாம் இயற்றிய நூலால் நினைவுகூறப்படுகிறார். திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி முதலிய சங்க நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 'திருஞான சம்பந்தர் கால நிச்சயம்' என்ற ஆங்கிலக் கட்டுரை ஒன்றை எழுதி இலக்கிய வரலாற்றுக்கு- கால ஆராய்ச்சிக்கு வழிகோலினார். இவருடைய நாடக நூலாம் மனோன்மணீயம் நடிப்பதற்கன்றிப் படிப்பதற்காகவும் எழுதப்பட்டது. இது லிட்டன் பிரபு (Lord Lytton) ஆங்கிலத்தில் எழுதிய 'இரகசிய வழி' (The Secret way) என்னும் நூலைத் தழுவியதாகும். தமிழ்ச்சுவை, நாடகச்சுவை, கவிச்சுவை கலந்த இந்நூல் நாடகக் காப்பிய உலகில் தலையாயதாய் மிளிர்கின்றது.

வி. கே. சூரியநாராயண சாஸ்திரியார்

திரு. வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் தம் பெயரைப் 'பரிதிமாற்கலைஞர்' எனத் தூய தமிழில் மாற்றி


  1. திரு. டி. கே. சண்முகம், தமிழ்நாட்டில் நாடக வளர்ச்சி-மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன் விழா மலர், ப. 226.