பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

331


அமைத்துக்கொண்டார். கவிஞராயும் நாடக ஆசிரியராயும் ஒருங்கே புகழ்பெற்று விளங்கிய இவர், 'ஞான போதினி' என்னும் தமிழ்ப் பத்திரிகைக்கும் ஆசிரியராய் இருந்தார். நலிந்து கிடந்த நாடகத்தமிழ் மீண்டும் புத்துயிர் பெற வேண்டுமென்று பாடுபட்டார். அதன் காரணமாகவே " நாடகவியல்' என்னும் நாடக இலக்கண நூலை இயற்றினார். 'பாவலர் விருந்து' என்ற பாடல் தொகுப்பு நூலையும், 'தனிப் பாசுரத் தொகை' என்ற இசைப்பாடல் தொகுப்பு நூலையும் இயற்றி வெளியிட்டார். அவற்றுள் சில, போப்பு அவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 'மதிவாணன்' என்ற உரைநூல் உயர்ந்த நடையில் எழுதப்பட்டதாகும். 'ரூபாவதி', 'கலாவதி', 'மான விஜயம்' என்னும் மூன்று நூல்களும் இடையிடையே பாட்டுகள் அமைக்கப்பட்டு உரைநடையில் எழுந்த நாடக நூல்களாகும். இவர் எழுதிய நாடகம் இவர் காலத்திலேயே நடிக்கப்பட்டது. இவர் எழுதிய 'தமிழ் மொழியின் வரலாறு' என்னும் நூல், மொழி நூலாகப் பயன்படுகிறது. நாடகத் தமிழ் நூல்கள் எழுதிய இவர், 1893ஆம் ஆண்டிலேயே இவ்வுலகை விட்டு மறைந்தது ஓர் இழப்பே ஆகும்.

பம்மல் சம்பந்த முதலியார்

'பம்மல் சம்பந்த முதலியார்' அவர்கள் நம்மிடையே வாழ்ந்த தமிழ் நாடகத் தந்தை' ஆவர். 1891இல் தான் அமெச்சூர் சபைகளும் தோன்றின. நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் சென்னையில் சுகுண விலாச சபையை நிறுவினார். பம்பல் முதலியாரவர்கள் நாடகத்தைத் தொழிலாகக் கொள்ளாமல் கலை வளர்ச்சியையே நோக்கமாகக் கொண்டு, நாடகக் கலைக்கு ஓர் உயர்வான ஸ்தானத்தைத் தேடித்தந்தார். பம்பல் சம்பந்த முதலியார் ஷேக்ஸ்பியர், காளிதாசன் ஆகியோரின் நாடகங்களை மொழி பெயர்த்ததோடு. கற்பனையாகவும் சுமார் எண்பது நாடகங்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். இவருடைய நாடகங்கள்