பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

335


இளைஞர் இருவர் இன்று நாடகத் துறையில் புதிய முறைகளைப் புகுத்தி மேனாட்டு நாடகங்களோடு நாடகங்கள் போட்டி இடும் வண்ணம் நவீன உத்திகளைக் (Techniques) கையாண்டு மேடையில் வெற்றி கண்டுவருகிறார்கள். ஒருவர் இப்பொழுது திரைப்பட இயக்குநராகிவிட்ட திரு. கே. பாலசந்தர் ஆவார். இவர் மனவுணர்ச்சிகளின் நெளிவு சுளிவுகளைப் புரிந்து கொண்டு, உணர்ச்சிக் கூத்தாடும் நாடகங்களை எழுதி, மேடையேற்றி வருகிறார். 'சர்வர் சந்தரம்', 'நீர்க் குமிழி', 'மெழுகுவத்தி', 'நாணல்,' 'எதிர்நீச்சல்', 'நவக்கிரகம்' பெண் பாத்திரம் இன்றி ஒரே அரங்கில் (Sat) பாட்டும் இல்லாது நடைபெறும் நாடகமான 'மேஜர் சந்திரகாந்த்' முதலிய நாடகங்கள் இவர் எழுதியனவாகும். இந்த நாடகங்கள் திரைப்படமாக வந்தும் வெற்றி கண்டுள்ளன.

நாடக மேடையைத் தம்வயப்படுத்தியிருக்கும் மற்றோர் இளைஞர் திரு. 'சோ' ஆவார். இவர் மக்கள் பெரிதும் விரும்பி மகிழும் நகைச்சுவை நாடகங்களை எழுதி மேடையேற்றி வருகிறார். இன்றைய சமுதாயச் சூழலில் உள்ள குற்றங்குறைகளை இவர் நாடகங்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன. எனவே, இவர் நாடகங்கள் பொதுமக்கள் இடையில் நல்ல வரவேற்புப் பெறுகின்றன, 'மனம் ஒரு குரங்கு', 'சம்பவாமி யுகே யுகே', 'கோவா டிஸ்', 'முகம்மது பின் துக்ளக்', 'யாருக்கும் வெட்கமில்லை', 'உண்மையே உன் விலை என்ன?' முதலியன இவர் எழுதி நடிக்கும் பிரபலமான நாடகங்களாகும்.

'ஆனந்த விகடன்' நிறுவனத்தினர் நடத்திய நாடக இலக்கியப் போட்டியில் திரு. முத்துசாமி என்பவர் எழுதிய 'கலங்கரைத் தெய்வம்?' முதற்பரிசு பெற்றது.

இலங்கேஸ்வரன் மனோகர் குழுவினர் நடிக்கும் 'இலங்கேஸ்வரன்', 'சாணக்கிய சபதம்' (மதுரை திருமாறன் எழுதியது), 'காடக முத்தரையன்', 'துரோணர்', இரா. பழனிச்சாமியின் 'சூரபத்மன்', 'மாலிக் காபூர்', 'விசுவா