பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

336

தமிழ் இலக்கிய வரலாறு


மித்திரர்' முதலிய இதிகாச சரித்திர நாடகங்கள் சிறந்த காட்சி அலங்காரத்தோடு செம்மையான முறையில் நடத்தப் பெறுகின்றன.

நடிகர் திலகத்தின் சிவாஜி நாடகமன்றம் முன்பு திரு. சக்தி கிருஷ்ணசாமி எழுதிய 'வீரபாண்டிய கட்டபொம்மன்' நாடகத்தினைச் சிறப்புற நடத்தி வந்தது. திரு. பாலமுருகன் எழுதியுள்ள 'நீதியின் நிழல்' , திரு. ஜி. பாலசுப்பிரமணியம் எழுதியுள்ள 'தேன்கூடு', திரு. சக்தி கிருஷ்ணசாமி எழுதியுள்ள 'ஜஹாங்கீர்' முதலிய நாடகங்களைச் சிறப்புற நடத்தி வருகின்றனர். திரு அகிலன் அவர்களின் சிறந்த படைப்பான 'வேங்கையின் மைந்தன்' என்ற புதினத்தை, திரு. சக்தி கிருஷ்ணசாமி, திரு. ஏ. பி. நாகராஜன் ஆகிய இருவரைக் கொண்டு நாடகமாக்கித் திறப்பட நடத்தினர். வியட்நாம் வீடு, தங்கப்பதக்கம் ஆகியன சிவாஜி மேடையில் அரங்கேறிப் பின் திரைப்படம் ஆகி வெற்றி கண்டன. எம். ஜி. ஆர் நாடக மன்றம் முன்பு 'அட்வகேட் அமரன்', திரு. நா. பாண்டுரங்கன் அவர்கள் எழுதிய 'சுமைதாங்கி' (பின்னர் இந்நாடகம் 'நல்லவன் வாழ்வான்' என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது), 'இன்பக்கனவு' முதலிய நாடகங்களை நடத்திவந்தது. நடிகவேள் எம்.ஆர். ராதாவின் பிரபலமான நாடகம். 'ரத்தக்கண்ணீர்' பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது. நாடகத்தில் பகுத்தறிவுப் பிரசாரம் செய்தவர் திரு. எம் ஆர் ராதா ஆவர். இங்குக் குறிப்பிடப்பட்டவர்கள் எல்லாம் தொழில்முறை நாடகக் கலைஞர்கள் (Professionals) கோமல் சுவாமிநாதன் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட ஓரங்க நாடகங்களையும் சில மேடை நாடகங்களையும் எழுதியுள்ளார்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் உரையாடலில் தீப்பொறி பறக்கும்; சிந்தனை சுடர்விட்டுத் தெறிக்கும். வளமான தமிழ் வந்து விளையாடும்; காதலைப்பற்றி வருணிக்கும்பொழுது கொஞ்சு தமிழ் குலவும். இற்றை நாள் தமிழ் உரைநடைக்கு உரமும், வளமும் ஊட்டி வருபவர் இவர். காதலானாலும் சரி, வீரமானாலும் சரி, இவர் எழுது