பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

337


கோல் உரைநடை தீட்டுவதில் தன்னிகரற்று விளங்குகிறது. 'திருவாளர் தேசியம் பிள்ளை ' 'காகிதப்பூ' முதலியன தேர்தல் பிரசார நாடகங்களாகும். இவருடைய உரைநடை ஆற்றலால் வண்ணமும் எழிலும் பெற்று வெற்றிநடை போட்ட நாடகங்கள் பலவாகும். பராசக்தி, மனோகரா, மந்திரிகுமாரி, பூம்புகார், அணையாவிளக்கு முதலிய திரைப்படங்களில், இவர் வசன நடை கைவந்த கலைஞராய்த் திகழ்வதனைக் காணலாம்.

பேராவூரணிப் பக்கத்தில் இருக்கும் மனோகரா என்ற பகுதியை மையமாக வைத்து எழுதப்பெற்ற புதினம் 'புதையல்' ஆகும். இவரது 'ரோமாபுரி பாண்டியன்' பெரும்புகழ் பெற்ற வரலாற்றுப் புதினம் ஆகும்.

அண்மைக் காலத்தில் வெளிவந்துள்ள சில நல்ல நாடகங்கள் பின்வருவன: ஒரு கிறித்தவனின் இதயத் தூய்மையை மையமாகக் கொண்டெழுந்துள்ள நாடகம் 'ஞான ஒளி' என்பது. கோவி.மணிசேகரனின் 'நான்கு திசைகள்', மணியனின் 'சொல்லத்தான் நினைக்கிறேன்' முதலியன தரமான நாடகங்களாகும்.

இவைகள் அல்லாமலும், எத்தனையோ பயில்முறை (அமைச்சூர்) நாடக மன்றங்கள் இப்போது இயங்கி நல்ல நாடகங்களை நடத்திவருகின்றன.

பிரபல எழுத்தாளர் சுஜாதாவும் நாடக உலகில் நுழைந்துள்ளார். 'ஒரு கொலை - ஒரு பயணம்?', டாக்டர் நரேந்திரனின் ‘வினோத வழக்கு’ ஆகிய இவருடைய நாடகங்களைப் பூர்ணம் விசுவநாதன் அரங்கேற்ற, மேடையில் புகழ் பெற்றுள்ளன. இவை நூல்களாக வெளிவந்துள்ளன.

இப்போது மனோகர் நாடகக் குழுவினரின் 'சுக்கிராச்சாரியார், எழுத்தாளர் 'மெரீனா' எழுதியுள்ள 'தனிக்குடித்தனம்' 'மெளலியின் 'ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது' ஆகிய நாடகங்கள் நல்ல வெற்றி கண்டுவருகின்றன.

த.-22