பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இலக்கியம்

341


இவர் ஆசிரியராய் இருந்த ஆனந்த விகடன், கல்கி பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளார். 'காதறாக் கள்ளன்', 'மயில்விழி மான்', 'ஒற்றை ரோஜா' என்பவை இவர்தம் சிறந்த சிறுகதைப் படைப்புகளாகும்.

வ. ரா. பண்பட்ட எழுத்தாளர். இவர் புதுமை நோக்கம் கொண்ட கதைகளை வழங்கியுள்ளார். 'ராஜாஜி' தத்துவங்களைப் புகுத்தி எளிய முறையில் எழுதுவதில் தலைசிறந்தவர். இவர் கதைகள் 'ராஜாஜி கதைகள்' என்ற நூலாய் வந்துள்ளன. திரு. கி. வா. ஜகந்நாதன் அவர்களின் 'பவள மல்லிகை' ஓர் உயர்ந்த படைப்பாகும். 'கலைஞன் தியாகம்' என்னும் இவரது சிறுகதைத் தொகுதி மிகவும் பாராட்டப் படுவதாகும். திரு. பி. எஸ். ராமையா மணிக்கொடி பத்திரிகை மூலமும், தினமணிக் கதிர் வாரப்பதிப்பு மூலமும் பல நல்ல அரிய கதைகளைத் தமிழ் உலகிற்குத் தந்துள்ளார்.

இன்றைய எழுத்தாளர்களில் 'சோமு' அவர்கள் பலமுறை சென்னை அரசாங்கத்தின் சிறுகதைக்கான பரிசினைப் பெற்றுள்ளார். 'கல்லறை மோகினி' 'கேளாத கானம்' என்பவை இவர்தம் அரிய படைப்புகள். விந்தன், புரட்சி மனம் உடைய ஓர் எழுத்தாளர்; ஏழையின் நெஞ்சக் குமுறலை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதில் வல்லவர். 'முல்லைக் கொடியாள்' என்ற இவர்தம் சிறு கதைத் தொகுதியில் உள்ள சிறுகதைகள் அனைத்தும் சிறுகதை மணிகள் எனலாம். டாக்டர் மு. வ. அவர்களின் 'விடுதலையா' என்ற சிறுகதைத் தொகுதியில் உள்ள கதைகளும், 'குறட்டை ஒலி' என்ற சிறு கதையும் சிந்தனைக்கு விருந்தூட்டுவன.

பெண் எழுத்தாளர்களில் அநுத்தமா, 'லக்ஷ்மி' எனப் புனைபெயர் கொண்டுள்ள டாக்டர் திரிபுர சுந்தரி, வேங்கடலஷ்மி, வசுமதி ராமசாமி, ராஜம் கிருஷ்ணன், ஆர். சூடாமணி, லட்சுமி சுப்பிரமணியம், கோமதி சுப்பிரமணியன் கிருஷ்ணா. குமுதினி, எம். எஸ். கமலா, எஸ். ரங்கநாயகி, ஆர். எஸ். ஞானாம்பாள், லஷ்மி நாகராஜன், கல்கி