பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

342

தமிழ் இலக்கிய வரலாறு


மகளார் ஆனந்தி, உமா குருமூர்த்தி, கு. ப. சேது அம்மாள், சரோஜா ராமமூர்த்தி, குயிலி, எல். என். சியாமளா, விமலாராணி, கஸ்தூரி பஞ்சு, கோமகள், இந்திரா, கே. ஜெயலட்சுமி, துளசி ஜெயராமன், சரஸ்வதி ராம்நாத், வத்சலா கோபால கிருஷ்ணன், லட்சுமி ராஜரத்தினம், ஜோதிர்லதா கிரிஜா, வாஸந்தி என்போர் குறிப்பிடத் தக்கவர். வேங்கடலஷ்மி எழுதிய 'மயிலும் மங்கையும்' என்ற சிறுகதை, சிறுகதை வரிசையில் சிறப்பிடம் பெறுவதாகும்.

ரா. கி. ரங்கராஜனின் படைப்பான 'பல்லக்கு' பரிசு பெற்ற சிறுகதைத் தொகுதி, 'பல்லக்கு' என்ற கதை ஓர் அரிய கருத்தினை நுண்மையான முறையில் விளக்குகின்றது. ‘நிலா நனையுமா?’ என்ற இவர்தம் கதையும் ஓர் அரிய படைப்பாகும். அகிலனின் ‘இதயச் சிறையில்’ ஒரு நல்ல சிறுகதை. 'நிலவினிலே, என்னும் இவர்தம் சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் சுவைமிக்கன. இன்று சிறுகதைத் துறையில் மேலை நாட்டு மாப்பஸான் போன்று புகழ் பெற்று விளங்குபவர் ஜெயகாந்தன். இவர் தம் 'யாருக்காக அழுதான்?' என்னும் சிறுகதை ஓர் அரிய கதை. இது திரைப்படமாகவும் வந்தது. இவர் எழுதிய 'உதயம்', 'ஒரு பிடி சோறு', 'இனிப்பும் கரிப்பும்' முதலிய சிறு கதைகள் சிந்தனைக்கு விருந்தூட்டுபவை. சமுதாயத்தில் இருண்டு கிடக்கும் பகுதிகளை இவர் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். புரையோடிப்போன - செல்லரித்துப் போன சமுதாயத்தின் பலவீனமான பகுதியினை இவர் அலசிக் காட்டுகின்றார்.

அறுநூறுக்கு மேற்பட்ட சரித்திரச் சிறுகதைகளை எழுதிக் குவித்தவர் கோவி. மணிசேகரன். இவருடைய 'சரித்திரக் கதைக் களஞ்சியம்', காளையார் கோயில் ரதம்', 'உயிரும் ஒளியும்' சரித்திர சமூகச் சிறுகதைத் தொகுதிகள் மிக்க நயமும் சுவையும் உடையன.

ந. பிச்சமூர்த்தி பழம்பேரெழுத்தாளர்; மணிக்கொடி எழுத்தாளர். இவர் எழுதிய 'மோகினி' முதலிய கதைகள்