பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

343


சிறந்தன. தி. ஜானகிராமனின் 'சிவப்பு ரிக்ஷா', 'கொட்டு மேளம்' நல்ல சிறுகதைத் தொகுதிகளாகும். இவரது 'சக்தி வைத்தியம்' சிறுகதைத் தொகுதி 1979இல் சாகித்திய அகாதெமியின் பரிசு பெற்றது. ல.சா. ராமாமிருதம் எழுதும் கதைகளை மேலோட்டமாகப் படித்தால் பொருள் விளங்காது. சிறிது சிந்தனைச் செறிவோடு ஆழ்ந்து கவனமாகப் படித்தால்தான், அக் கதைகளினூடே ஆழ்ந்த மறைபொருள் - தத்துவம் ஒன்று நிழலாடுவதைக் காண இயலும். ஜெகசிற்பியனைச் சிறந்த சிறுகதை எழுத்தாளர் வரிசையின் முன்னணியில் வைக்கலாம். இவருடைய ' நரிக்குறத்தி', 'நொண்டிப் பிள்ளையார்' நல்ல படைப்புகள். இவர் சிறுகதைகள் அனைத்தும் நல்ல சுவையினை நல்குவன.

நா. பார்த்தசாரதி, தமிழ் இலக்கியம் பயின்றவர். புதுமை இலக்கியம் உணர்ந்தவர். பழமையில் கால் கொண்டு புதுமையில் கிளைவிடும் இவர் கதைகள் அரிய படைப்புகளாய் உள்ளன. 'மூவரை வென்றான்' என்ற சிறுகதைத் தொகுதியில் உள்ள கதைகள் மிகுந்த சுவைநலங் கொண்டனவாகும். டி. கே. சீனிவாசன் ஓர் அற்புதமான சிறுகதை எழுத்தாளராவர். ஆழ்ந்த கருத்துகளை உள்ளடக்கியானவாக இவர் சிறுகதைகள் பளிச்சிடும். 'எல்லைக்கு அப்பால்', 'துன்பக் கதை', 'குறள் கொடுத்த குரல்' ஆகியன இவர்தம் சிறுகதைத் தொகுதிகள். பம்பாய்ச் சூழலை வைத்துச் சுவையாகக் கதை பின்னுபவர் மாயாவி. 'சாவி' நகைச்சுவை நயமிக்க சிறுகதைகள் எழுதுவதில் வல்லவர்.

வ. சா. நாகராசனின் 'வெள்ளம்', கு. ப. ராவின் 'விடியுமா'விற்குப் பின்னர்த் தமிழில் வந்த சிறந்த சிறுகதை எனலாம். கலைமகளில் வெளியான அகிலனின் 'எரிமலை' உயர்ந்த சிறுகதை. கோவி.மணிசேகரன் ஒளரங்கசீபைப் பாத்திரமாகக் கொண்டு எழுதிய 'பாதுஷாவின் பாதுகை' சிறந்த கதையாகும். ஷாஜகானைப் பாத்திரமாகக் கொண்டு எழுதிய 'கண்ணே, கனியே, கற்கண்டே', ஆனந்த விகடனில் வந்த சமூகக் கதையாகும். 'அதுவும் அங்கே முடியுமானால்'