பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

345


டாலும் மாதந்தோறும் நானூறு சிறு கதைகள் வெளியாகின்றன. ஆண்டுக்குச் சுமார் நான்காயிரத்து எண்ணூறு கதைகள் பிரசுரமாகின்றன. இக் கதைகளின் தன்மை என்ன, தரம் என்ன என்பதைத் தொடர்ந்து மதிப்பிடுவது சிறந்த இலக்கியத் தொண்டாகும்.

சென்னையில், ப. லெட்சுமணன், ப. சிதம்பரம், ப. பாரதி என்னும் உடன் பிறந்தோர் 'இலக்கியச் சிந்தனை' என்னும் ஓர் அமைப்பை நடத்திவருகிறார்கள். இலக்கியச் சிந்தனை ஒவ்வொரு திங்களும் கடைசிச் சனிக்கிழமையில், ஒரு சிறந்த எழுத்தாளரைக் கொண்டு, அதற்கு முந்திய மாதத்தில் தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவந்த சிறுகதைகளை மதிப்பிடச் செய்து, சிறந்த சிறுகதை ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் செய்கின்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறு கதை, குறிப்பிட்ட மாதத்தின் சிறந்த கதையாக அறிவிக்கப்பட்டுப் பரிசளிக்கப்படுகிறது. இவ்வாறு ஜனவரி முதல் டிசம்பர் வரை இலக்கியச் சிந்தனை தேர்ந்தெடுக்கும் பன்னிரண்டு சிறுகதைகளையும், ஒரு சிறந்த திறனாய்வாளரிடம் அளித்து, அவற்றுள் சிறந்த ஒரு கதையைத் தேர்ந்தெடுக்கச் செய்து, அதனை அந்த வருடத்தின் சிறந்த சிறுகதையாக அறிவித்துப் பரிசளிக்கிறார்கள். வருடத்தின் பன்னிரு சிறுகதைகளையும் நூலாக வெளியிட்டு, அதற்கு வருடத்தின் சிறந்த சிறுகதையின் தலைப்பையே தலைப்பாகத் தருகிறார்கள். இது தொடர்ந்து நடந்துவருகிறது.

1978, 79, 80 ஆகிய மூன்றாண்டுகளில், பசி, அற்ப ஜீவிகள், சின்னம்மிணி ஆகிய, மூன்று சிறுகதைத் தொகுதிகள் இலக்கியச் சிந்தனை தேர்ந்தெடுத்த கதைத் தொகுதிகளாக வெளிவந்துள்ளன. 1978 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதை 'பசி', இதனை எழுதியவர் மும்தாஜ் யாசீன். 1979 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதை 'அற்பஜீவிகள்'; இதை எழுதியவர் மலர் மன்னன். 1980 ஆம் ஆண்டில் சிறந்த சிறுகதை சின்னம்மிணி; இதை எழுதியவர் திருப்பூர்