பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

346

தமிழ் இலக்கிய வரலாறு


கிருஷ்ணன். ஒரு தொகுதியிலுள்ள பன்னிரு சிறுகதைகளைப் படித்தால், அந்த ஆண்டின் சிறு கதைகளின் தரம் எத்தகையது என்பதைப் புரிந்துகொள்ளலாம். கதைகளின் திறனாய்வுக் கட்டுரையும் நூலின் முற்பகுதியில் உள்ளது.

இலக்கியச் சிந்தனை அளிக்கும் இச் சிறுகதைத் தொகுதிகள் 'தமிழகத்தின் சிறுகதைக் கலை, சிறுகதைத் திறனாய்வுக் கலை' ஆகிய இரண்டின் வளர்ச்சிக்கும் துணை செய்கின்றன. 'கல்கி' இதழும் ஆண்டுதோறும் அமரர் கல்கி நினைவாகச் சிறுகதைப் போட்டி நடத்திச் சிறுகதைக் கலை வளம்பெறத் துணை செய்கிறது.

அண்மைக் காலத்தில் ஒரு சிறுகதைக்குப் பரிசாக அளிக்கப்பட்ட பெருந்தொகை ரூபாய் பத்தாயிரம். ஆனந்த விகடன் தனது வெள்ளிவிழாவை முன்னிட்டு நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசாகப் பத்தாயிரம் ரூபாய் அளித்தது. அண்மைக் காலத்தில் புனைகதை உலகில் புகுந்து மிக விரைவில் பெரும் புகழ் பெற்றுவிட்ட அனுராதா ரமணன் 'சிறை' என்னும் சிறு கதைக்காக இப் பத்தாயிரம் ரூபாய்ப் பரிசைப் பெற்றார். ஒரு சிறுகதைக்கு இவ்வளவு பெரிய தொகையை வேறு எந்த மொழியிலும் அளித்திருப்பதாகத் தெரியவில்லை.

குட்டிக் கதைகள்

சிறுகதை என்பது சிறிய கதை என்னும் பொருளது. முன்பெல்லாம் ஒரு பத்திரிகையில் வரும் சிறுகதை ஐந்து பக்கம் இருக்கும். சில கதைகள் இருபது பக்க நீளமும் பெற்றிருக்கும். ஆனால், சின்னஞ்சிறு கதையாக, ஒரே ஒரு பக்கத்தில் சிறுகதைகளை நிறைய வெளியிடும் போக்குத் தற்போது காணப்படுகிறது. ஆனந்தவிகடனில் 'சரி' என்பவர் ஒரு பக்கக் கதைகளை ஒரு காலத்தில் எழுதி வந்தார். கல்கியில் 'விந்தன்' அவர்கள் ஒரு பக்கக் கதைகளைக் 'குட்டிக் கதைகள்' என்னும் பெயரில் வழங்கினார். இப்போதோ,