பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இக்காலம்

347

எந்தப் பத்திாிகையை எடுத்தாலும் ஒரு பக்கக் கதைகள் நான்கைந்தை ஒரே இதழில் காணமுடிகிறது. சில சந்தா்ப்பங்களில், பத்து, இருபது ஒரு பக்கக் கதைகளையும் இப்பத்திாிகைகள் ஒரே இதழில் வழங்கி வருகின்றன. ஆற அமரப் படித்துச் சுவைப்பதற்குப் பாேதுமான ஓய்வு கிடைக்காத காலம் இது. மனிதனும் இயந்திரகதியில் விரைவாகச் செயல்படுகின்றான். அதனால் பேருந்தை எதிா்பாா்த்துக் காத்து நிற்கையில், பேருந்தில் பயணம் செல்கையில், சில நிமிடங்களில் படித்து முடிக்கக்கூடிய இக்'குட்டிக்கதை'களுக்கு வாசகா்களிடம் வரவேற்பு இருக்கிறது. சில ஆண்டுகளில் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தில், 'குட்டிக்கதை இலக்கியம்' என்று ஒரு பிாிவு தோன்றினாலும் வியப்படைவதற்கில்லை.

தமிழில் நாவல் வளா்ச்சி

மனித மனம் கதையிலும் வரலாற்றிலும் ஆா்வம் காட்டுவது; உணா்ச்சிகளுக்கு ஒரு வடிவம் தரவேண்டும் என்று விரும்புவது. ஒருவா் வாழ்வே நாவல் எனலாம். எனவேதான், மேலைநாட்டு ஆசிாியா் ஒருவா் சாதாரண மனிதா்கூடத் தத்தம் வாழ்வினையே வடித்தெடுத்தெழுதினாற்கூட ஒரு நாவலாகிவிடும் என்று கூறிப்பாேந்தாா்.

மேலை நாட்டாா் தொடா்பால் வளா்ந்த துறை, இந்த நாவல்துறை. முதற்கண் நாவலில் இலக்கணத்தை ஓரளவு காண்போம். நம் வாழ்க்கையை அவ்வாறே எடுத்துக்காட்டுவதாகக் கதை அமைய வேண்டுவதில்லை. வாழ்க்கையோடு இயைந்ததாக அமைய வேண்டும்; மக்களின் வாழ்க்கையைவிட உயா்ந்த வாழ்க்கையாக பெருமைமிக்க வாழ்க்கையாக - ஆற்றல்மிக்க வாழ்க்கையாகக் கதையின் கற்பனை அமையலாம். ஆயினும் மக்களின் உணா்ச்சிகளையும் குறிக்கோள்களையும் ஒட்டியதாகவே அந்தக்