பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

353


காதலி' சரித்திர நாவல்களில் ஒரு காவியச் சிறப்புப் பெறுகிறது. காரூவகி நல்ல பாத்திரம். விக்கிரமன் எழுதிய 'உதயசந்திரன்', 'நந்தி புரத்து நாயகி', 'காஞ்சி சுந்தரி' என்பன நல்ல வரவேற்பைப் பெற்ற நாவல்களாகும். இவர் வரலாற்றிற்குப் புறம்போகாமல் எழுதக் கூடியவர்.சோமுவின் 'கடல் கண்ட கனவு', 'வெண்ணிலவுப் பெண்ணரசி' பழந்தமிழகப் பண்பாட்டைப் பரக்கப் பேசும் பொற் சித்திரங்களாகும். நா. பார்த்தசாரதியின் 'பாண்டிமா தேவி' நல்ல நாவலாகும். இதில் வரும் மகா மண்டலேசுவரரை நாம் எளிதில் மறக்க இயலாது. 'மணிபல்லவம்' இவர் எழுதிய மற்றொரு நல்ல நாவலாகும்.

வரலாற்று நாவல்களைச் சுவையுற எழுதும் மற்றோர் எழுத்தாளர் பூவண்ணன். இவருடைய 'காந்தளூர்ச் சாலை' 'கொல்லி மலைச் செல்வி' சிறந்த வரலாற்றுப் புதினங்கள் என்று குறிப்பாகச் சொல்லலாம். ஆர் வி. யின் 'ஆதித்தன் காதல்', மாயாவியின் 'மதுராந்தகியின் காதல்', கி.ரா. கோபாலனின் 'மாலவல்லியின் தியாகம்' முதலியன தமிழ் மக்களுக்கு வரலாற்று நாவல் படிப்பதில் உள்ள மோகத்தினால் பிறந்தவை.

நாட்டியக் கலைக்கு முதன்மை தந்து, பல்லவர் கால வரலாற்றுப் பின்னணியில் எழுந்த கதையே கோவி. மணிசேகரனின் 'ராஜசிம்மனின் காதலி'. கொற்கை சுந்தர பாண்டியனை மையமாக வைத்துக் கற்பனையை நெடுகப் படரவிட்டுச் சுவைபயக்கச் சாண்டில்யனால் எழுதப்பட்ட கதை 'ராஜ முத்திரை', கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 'ரோமாபுரிப் பாண்டியன்', 'தென்பாண்டிச் சிங்கம்', தாமரைமணாளன் எழுதிய 'அந்தப்புரம்', ஸ்ரீ வேணு கோபாலன் எழுதிய 'திருவரங்கன் உலா', 'சுவர்ணமுகி', மு. மேத்தாவின் "சோழநிலா', கி. ராஜேந்திரனின் (செம்பியன்) 'ரவிகுல திலகன்' ஆகியன அண்மைக் காலத்தில் வெளிவந்த இனிய வரலாற்றுப் புதினங்களாகும்.

த.- 23