பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இ

க்காலம்

357


'கல்லுக்குள் ஈரம்', 'போரட்டங்கள்', 'திருடர்கள்', 'நம்பிக்கைகள்' என்னும் ர. சு. நல்லபெருமாளின் நல்ல புதினங்களும் மிகச்சிறந்த புதினங்களாகும்.

நா. பார்த்தசாரதி 'சமுதாய வீதி' நாவலுக்காக சாகித்திய அகாதெமிப் பரிசையும், 'துளசி மாடம்' நாவலுக்காக அண்ணாமலை அரசரின் பத்தாயிரம் ரூபாய்ப் பரிசையும் (1981-ல்) பெற்றுள்ளார். அண்ணாமலை அரசரின் பரிசை 1980-ல் 'யாகசாலை' நாவலுக்காக கோவி. மணிசேகரன் பெற்றார். இலக்கியச் சிந்தனை நாவலுக்காக அளிக்கும் பரிசை 1981-ல் பால குமாரன் தன் 'மெர்க்குரிப் பூக்கள்' என்னும் நாவலுக்காகப் பெற்றுள்ளார். மனத்தின் ஆழத்தில் இருக்கும் உணர்வுகளை, எண்ணங்களை வெளியே இழுத்துப் பலரும் உணருமாறு செய்யும் அற்புத நடையில் எழுதப்பட்டதாகும் இந்நாவல். இவருடைய 'இரும்பு குதிரைகள்' 1985 ஆம் ஆண்டு அண்ணாமலை அரசர் பரிசு பெற்றது.

கூட்டு நாவல்கள்

மேல் நாட்டில் லாரி காலின்ஸ், லாப்பரி டொமினிக் (Larry collins and Lapier de Dominique) என்னும் இரட்டையர்கள், அண்மையில் 'The fifth horse man' என்னும் நாவலைக் கூட்டாக எழுதி வழங்கியிருக்கிறார்கள். இந்நாவல் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இவர்கள் இதற்கு முன்னர் Freedom at midnight, Is Paris Burning முதலிய நூல்களைக் கூட்டாக எழுதியிருக்கிறார்கள். ஆற்றல் மிக்க இரண்டு எழுத்தாளர்கள் ஒன்று சேர்ந்து எழுதும்போது, புதுமையும் சுவையும் பொதிந்த நாவல்கள் பிறப்பது இயல்பே. பழங்காலத்து இரட்டைப் புலவர்கள் போல இக்காலத்திலும் இரட்டை எழுத்தாளர்கள் ஒரு நாவலின் அத்தியாயங்களை மாறிமாறி எழுதிப் படைத்து நாவல் உலகில் புதிய சாதனை செய்துள்ளார்கள்.

புதுமைக்குப் பெயர் பெற்ற குமுதம் இதழ், பிரபலமான பெண் எழுத்தாளர்களான சிவசங்கரி, இந்துமதி ஆகிய இரு