பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

358

தமிழ் இலக்கிய வரலாறு


வரையும் கொண்டு ‘இரண்டு பேர்’ என்னும் நாவலை எழுதச் செய்து வெளியிட்டது. நாவல் மக்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது. பின்னர் 'நானும் நீயும்' என்னும் நாவலை, கவிதா, நித்யாமூர்த்தி ஆகிய இருவரைக் கொண்டு எழுதச் செய்து வெளியிட்டது. 'அமுதசுரபி', ஒவ்வோர் அத்தியாயத்தை ஒரு பிரபல எழுத்தாளரைக் கொண்டு எழுதச் செய்தது. அண்மையில் 'சாவி' இதழ் பன்னிருவரைக் கொண்டு ஒரு நாவல் எழுதி வெளியிடும் முயற்சியில் இறங்கியது. கூட்டு நாவல்கள் ஒட்டுமாங்கனி போல, பழக் கலவை (fruit salad) போலப் புதுச்சுவை தருகின்றன.

குட்டி நாவல்கள்

'மாதம் ஒரு நாவல்' வழங்குவதை நோக்கமாகக் கொண்டு சில பத்திரிகைகள் தோன்றியுள்ளன. சுமார் 100 பக்கங்கள் கொண்ட ஒரு நாவலை இவை வழங்குகின்றன. மாலைமதி, மோனா, மணியன் மாத இதழ், ராணிமுத்து, கதைக்கதிர், மெட்டி, குங்குமச்சிமிழ் முதலிய இதழ்கள் இப்பணியில் இறங்கியுள்ளன. ஜெயகாந்தனின் ‘ஜய ஜய் சங்கர’ என்னும் நாவல் ஒரு ரூபாய் மலிவு விலைக்கு வெளியிடப்பட்டு இலட்சம் பிரதிகள் விற்றது. தொடர்ந்து கண்ணதாசனின் நாவல்கள் இவ்வாறு விற்பனையாயின. இவ்வெற்றிகளைக் கண்டே மாதம் ஒரு நாவல் வெளியிடும் பத்திரிகைகள் தோன்றின. இவை புதிய நாவல்கள் வெளியிட்டன. அதனால், முன்பு பழைய நாவல்களைச் சுருக்கி வெளியிட்டு வந்த 'ராணிமுத்து' இதழும் புதிய நாவல்களை வெளியிடத் தொடங்கிவிட்டது.

சுமார் நூறு பக்கங்களைக் கொண்ட இக் கதைகளைக் 'குட்டி நாவல்கள்' என்று அழைப்பதே பொருத்தமாகும். இவையும் தமிழ்ப் புனைகதை இலக்கியத்தின் வளர்ச்சிக்குத் தொண்டாற்றுகின்றன. சுஜாதாவின் 'விபரீதக்கோட்பாடு', மகரிஷியின் 'புவனா ஒரு கேள்விக்குறி', அனுராதா ரமணனின் 'சந்தியா காலத்துச் சலனங்கள்', சிவசங்கரியின், 'ஒரு சிங்கம் முயலாகிறது' (அவன்- அவள் - அது - என்னும் திரைப்பட