பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

366

தமிழ் இலக்கிய வரலாறு


'சுகம் எங்கே!', 'கிரெளஞ்ச வதம்' முதலியன இவர் மொழி பெயர்த்த சிறந்த நாவல்களாகும். த. நா. குமாரசுவாமி வங்காள இலக்கியங்களைத் தமிழில் தந்தவர். த. நா. சேனாதிபதி, தாகூர் நூல்களை மொழி பெயர்த்துள்ளார். எம். எஸ். கமலா, அடவி பாபிராஜு என்னும் பிரபல தெலுங்கு நாவலாசிரியர் எழுதிய 'நாராயண ராவைத் தமிழில் தந்துள்ளார். துளசி ஜெயராமன், சரஸ்வதி ராம் நாத் இருவரும் வங்காளம், இந்தி, குஜராத்தி நாவல் களை நன்கு தமிழில் மொழி பெயர்த்துத் தருகின்றனர். ரா. வீழிநாதன் இந்தி நாவல்களைத் தமிழில் தந்துள்ளார்.

இன்றையத் தமிழ் நாவல்கள், நாவல் உத்திகள் பலவும் நன்கு கைவரப் பெற்றுச் சிறந்த முறையில் அமைந்து வருவதனைக் காணும் பொழுது, நம் மனம் கழிபேருவகை அடைகின்றது. இத் துறையில் புதுமை இலக்கியங்கள் பல தமிழில் நித்த நித்தம் புத்தம்புது மலர்களாகப் பூத்துக் குலுங்குக!

இதழ்களும் புனைகதை இலக்கியமும்

தற்காலத்தில் சிறுகதை, நாவல், பயணக் கட்டுரை. வாழ்க்கை வரலாறு. கவிதை, புதுக்கவிதை முதலிய இலக்கியக் கூறுகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாத காரணம், இதழ்களின் வளர்ச்சியே. சிறப்பாக நாவல்கள், சிறுகதைகள் ஆகிய புனைகதைகள் இதழ்களையே இலட்சியமாகக் கொண்டு எழுதப்படுகின்றன. ஓராண்டில் வெளிவரும் புனைகதை (fiction) நூல்களில் தொண்ணூறு சதவிகிதம், இதழ்களில் வெளிவந்தவையே.

அண்மைக் காலத்தில் பருவ ஏடுகள் பல்கிப் பெருகின. ஆனந்த விகடன், கல்கி, குமுதம், ராணி ஆகியன பழங்காலத்