பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

367


தவை எனச் சொன்னால் குங்குமம், இதயம் பேசுகிறது. தேவி ஆகியன எழுபதுகளில் எழுந்தவை. இவ்விரண்டும் பத்திரிகை உலகில் நிலை பெற்ற காரணத்தால், சாவி, தாய் ஆகியவை தோன்றி வேரூன்றி வருகின்றன. இவை யாவும் வார இதழ்கள். கலைமகள், அமுதசுரபி ஆகியன அன்று போல் இன்றும் வெளிவரும் திங்கள் ஏடுகள்.

அஸ்வினி, புஷ்யம், கமலம் முதலிய பல இதழ்கள் தோன்றிய வேகத்தில் மறைந்துவிட்டன.

நாளிதழ்கள்கூடச் செய்திகளைத் தருவதுடன் சிறுகதைகளையும் தொடர்கதைகளையும் அவ்வப்போது வெளியிடுகின்றன. வாரத்தில் ஒருநாள் வாரமலரைச் செய்தித்தாளுடன் இணைத்து வெளியிடுகின்றன சில; வேறு சில வாரத்திற்கு இரண்டு மூன்று முறை சிறுகதை, தொடர்கதைகளை வெளியிடுகின்றன.

'தினமலர்' என்னும் நாளேடு, நாளிதழுடன் வெளியிட்ட வார மலரைத் தனியே ஒரு பத்திரிகை போல அச்சிட்டு ஞாயிற்றுக்கிழமை நாளிதழுடன் வழங்கியது. விற்பனைச் சரிவால் பாதிக்கப்பட்ட தினமணி கதிர் அதை நிறுத்துவதற்குப் பதில், அதைத் தனியே அச்சிட்டு, ஞாயிற்றுக்கிழமை தினமணியுடன் இணைத்து அளித்து வருகிறது.

இன்று சிறுகதையும் நாவல்களும் வளம்பெற்று வாழ்வதற்கு இதழ்களே துணை செய்கின்றன இதழ்களின் எண்ணிக்கை மிகுதியானமையினால் சிறுகதை நாவல்கள் புதிது புதிதாகத் தோன்றுகின்றன. ஒவ்வொரு வாரமும் சுமார் நூறு சிறுகதைகளும், ஒவ்வோராண்டும் சுமார் ஐம்பது தொடர்கதைகளும் இவ்விதழ்கள் மூலம் வெளிவருகின்றன. இவற்றுள் மூன்றிலொரு பகுதி நூல்களாக வெளிவந்து நிலைபேற்றுக்கு வித்திடுகின்றன.

சுருக்கமாகச் சொன்னால் இன்றைய புனைகதை இலக்கியம் இதழ்களைச் சார்ந்தே நிற்கிறது. இதழ்களின்